ஊடுருவிய மாஃபியாக்கள்!
கடற் புலிகள், பெண்புலிகள், தனது தனிப்பட்ட விருப்புகள்- பழக்கங்கள் -சந்தோ ஷங்கள் பற்றி வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மனம் திறந்து பேசிய நேர்காண லின் நிறைவுப் பகுதிகளை சற்றே இடை வேளைக்குப் பின் பதிவு செய்கிறேன். இவ்விதழில் சுவீடன் நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த 15-ம் தேதியன்று மூன்று நீதிபதிகள் குழுவைக் கொண்டு விசாரித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கினை கவனப்படுத்த விழைகிறேன்.
விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்கும் வழக்கு அதிபர் ராஜபக்சேவின் சிறு வயதுத் தோழனும், கருணம்மானை துரோகப் பிரிதலுக்கு ஈர்த்துச் சென்ற திரை மறைவுப் பேச்சுவார்த்தைகளில் முக்கியமாயிருந்தவரும், உலக அளவில் இலங்கை உளவுத்துறையின் ஊடகக் கூலியாய் வேலை செய்பவரும் "ஏசியன் ட்ரிபியூன் - ஆள்ண்ஹய் பழ்ண்க்ஷன்ய்ங்' என்ற இணையதளம் நடத்துபவருமான கே.ஜி. ராஜசிங்கம் என்பவரை மையமாகக் கொண் டது.
ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்தில் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவர் நீதிகேட்டுச் சமர்ப்பித்துள்ள மனுவின் மீதே கடந்த 15-ம் தேதி மூன்று நீதிபதிகளும் கே.ஜி. ராஜசிங்கத்தை குறுக்கு விசாரணை செய்தனர். சொந்த இனத்தை அழிப்பவனுக்கு கூலி வேலை செய்பவன் கேவலமானவன் மட்டுமல்ல, அசிங்கமான கோழை என்பதை யும் ராஜசிங்கம் அன்று நீதிமன்றத்தில் நிரூபித்தார்.
வழக்கு நடப்பது ராஜபக்சேக் களின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை நீதிமன்றங்களில் அல்ல வென்பதும், அவதூறு வழக்கு களை ஐரோப்பிய நீதிமன்றங்கள் லேசாக விடுவதில்லை என்பதையும் ராஜசிங்கம் நன்றாகவே அறிந்து வைத் திருக்கிறார். அந்த வகையில் புத்திசாலிதான். என்ன செய்தார்? உண்மையை ஒத்துக்கொண்டு நீதிபதிகள் முன் சாஷ்டாங்கமாகிவிட்டார். ""ஆம் ஐயன்மீர்... எனது ஏசியன் டரிபியூன் இணையதளத்தில் வெளிவரும் 90 சத செய்திகளும்,, கட்டுரைகளும் எனக்குத் தருகிறவர்கள் இலங்கை உளவுத்துறையினரும், அதிகாரிகளும், இலங்கை வெளியுறவுத் தூதரக அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தான். அவர்களுக்காகத்தான் நான் வேலை செய்கிறேன். அவர்கள் தரும் கட்டுரைகளின் உள்நோக்கம் எனக்குப் புரியும், ஆனால் உண்மைத் தன்மை தெரியாது'' என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார். வழக்கின் மீதான தீர்ப்பு வரும் மே-6 அன்று வழங்கப்படும்.
இந்த ராஜசிங்கம்தான் 2007-ம் ஆண்டு மார்ச் 18-ந் தேதி தனது இணையதளத்தில் நான் இந்தியாவில் புலிகளுக்கான முக்கிய தொடர்புப் புள்ளியென்றும், 1999-ம் ஆண்டு பாரிஸ் டி.ஆர்.டி. தொலைக்காட்சியோடு இணைந்து நடத்திய வன்னி பிள்ளைகள் பட்டினிச் சாவுக்கெதிரான நிதி சேகரிப்பை புலிகளுக்கென செய்யப்பட்டதாகக் கொச்சைப்படுத்தியும் கட்டுரை வெளியிட்டிருந்தார். செய்தியின் பின்னணியில்தான் இங்கே தமிழகத்தில் தமிழீழ அரசியலுக்கு ஆதரவானதுபோல் அழகாக வேஷம் காட்டிக்கொண்டு உண்மையில் இந்திய-இலங்கை புலனாய்வுப் பிரிவுகளின் முக்கிய கருவியாய் செயற்படும் ஒரு அரசியற் பத்திரிகை ""அரசின் ஆசி பெற்ற மர்ம மனிதர்'' என்று என்னை அட்டைப் படமும் ஆக்கியது.
அதே காலத்தில்தான் ஜெயா தொலைக்காட்சி "யார் இந்த ஜெகத் கஸ்பர்?' என ஒரு வார காலம் பார்வை யாளர்களை உசுப்பேற்றியது. இதை இங்கு இத்தருணத்தில் நினைவுபடுத்தக் காரணம் தமிழக ஊடகங்களிலேயே ஒரு பிரிவினர் மிகவும் திட்டமிடப்பட்ட பெரிய வலைப் பின்னல்களோடு ஈழ விடுதலையை அழிக்க இயங்கினார்கள் -இப்போதும் இயங்கிக்nகொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவுபடுத்தவே.
சரி, ராஜசிங்கத்திற்கே வருவோம். அவர் இன்று ஓர் பொருட்டான ஆள் அல்ல. கூலிக்கு வேலை செய்த ஒரு துரோகி, அவ்வளவே. ஆனால் அவரைப் போலவே இன்று முளைத்துள்ள பல்வேறு தமிழ் இணையதளங்களுக்குப் பின் இருக்கிறவர்களும் இலங்கை உளவுத்துறையினரும் தமிழீழ விடுதலையின் துரோகிகளாய் மாறி- ஆனால் தூயவர்கள்போல் வேடமிட்டு ஓர் மாஃபியா போலவே ஆகியிருக்கும் சிறு குழுவினர். தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலத்தைப் பொறுத்தவரை ராஜபக்சே சகோதரர் களைக் கண்டு அஞ்சுவதைவிட இந்த மாஃபியாவைக் கண்டு அஞ்சியே ஆகவேண்டும்.
ராஜபக்சேக்களுக்கு வயதாகும். ஒருநாள் செத்தும் போவார்கள். இன்று அவர்கள் காட்டுகிற ஆணவம் ஓரிரு ஆண்டுகளில் அறுவடையாகும். வரலாறு நெடுகிலும் நாம் காணாத சர்வாதி காரிகளா, என்ன? அவ்வகையில் இன்று தமிழருக்கான ஒரே நம்பிக்கை அவர் கள்தான் என்று நாம் வேடிக்கையாகப் பகிடி செய்யலாம்.
ஏனென்றால் தங்கள் ஆணவத் திமிர்கொண்ட செயற்பாடுகள் மூலம் உலக வெறுப்பை சம்பாதித்து, உலகக் கருத்து ஒருநாள் தமிழருக்கு ஆதரவாய் திரும்பும்படி செய்வார்கள் என்பது என் திடமான நம்பிக்கை. ஆனால் தமிழீழ விடுதலையை ஊடுருவிட்ட மாஃபியா உள்ளிருந்தே அழிக்கும் புற்றுநோய் போல. விடுதலைப் போராட்ட அழிவில் இவர்களது பங்கு முக்கியமானது. இது பலருக்கும் தெரியும், ஆனால் விவாதிக்கிற துணிவு எவருக்கும் இல்லை.
உலகத் தமிழர்களை உணர்வலையில் இணைப்பதில் இணையம் இன்று முக்கிய பங்காற்றுவதால் முள்ளிவாய்க்கால் அரங்கேறியதுமே இவர்கள் செய்த முதல் வேலை தமிழில் புதிய இணைய தளங்களை உருவாக்குவது, இருக்கிற இணையதளங்களை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் எடுப்பது, ஒத்து வராதவர்களை மிரட்டி மூடவைப்பது. புலம்பெயர் தமிழர்களால் அதிகம் படிக்கப்பட்ட -மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டிற்குப் புலம்பெயர்ந்து அங்கிருந்து நடத்தி வந்த "புதினம்' என்ற இணையதளம் மூடப் பட்டதன் பின்னணி இந்த மாஃபியா நடத்திய கொலை மிரட்டல்களும், தாக்குதல்களும்தான்.
அதுபோலவே தமிழுலகின் தலைசிறந்த அரசியற் சட்டநிபுணர் என நான் வணங்கி மதித்துப் போற்றும் நடேசன் சத்யேந்திரா அவர்கள் பிரித்தானியாவிலிருந்து நடத்தி வந்த பஹம்ண்ப்ய்ஹற்ண்ர்ய்.ஞழ்ஞ் என்ற இணையதளம் தமிழரைப் பொறுத்தவரை ஆக்ஸ்போர்ட் நூலகத்தைப் போல. நார்வே நாட்டு இடைப்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இவரது பெயர் முக்கியமாக முன் வைக்கப்பட்டது. ஆனால் வயது மற்றும் தனிப்பட்ட காரணங்களால் இந்த அசாத்திய அறிவு ஆளுமையின் சேவை அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு கிட்டவில்லை. அவரது பஹம்ண்ப்ய்ஹற்ண்ர்ய்.ஞழ்ஞ் இணையதளம் அற்புதமான கருத்துக்களமாகவும் இருந்தது. இப்போது திடீரென மூடப்பட்டுவிட்டது. அதற்குப் பின்னாலும் நான் சொன்ன அந்த மாஃபியா இருக்கலாமென்ற ஐயத்தை லண்டன் நண்பர்கள் பலரும் கூறுகின்றனர்.
கடைசி கட்ட யுத்தத்தை பயன்படுத்தி இந்த மாஃபியா புலம் பெயர் மக்களிடமிருந்து பறித்த கோடிக்கணக்கான பணத்தில் மாளிகை வீடுகள் பல எழுந்துள்ளதாகவும், சிலுக்கான வாகனங்கள் ஓடித்திரிவதாக வும் தினம் இரண்டு தமிழர்களாவது தொலைபேசியில் கூறி அங்கலாய்க் கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொந்த வீடுகளை அடகு வைத்து கடைசிப் போருக்கு காசு, பணம் கொடுத்தவர்கள். இந்த மாஃபியாவின் ஆளுமைக்குள் சமீபத்தில் வந்துவிட்ட இணையதளங்களுள் ஒன்று தமிழ்வின். இந்த இணையதளம்தான் நடேசன், புலித்தேவன், படுகொலைச் சதிக்கு நானும் தமிழகத்திலுள்ள சிலரும் உடந்தையாக இருந்தோம் என புழுகுத் தலைப்புச் செய்தி வெளியிட்டது. அதே செய்தியை இங்கே தமிழகத்தில் புதிய கலாச்சாரம் என்ற இதழும் பெரிய கட்டுரை யாக்கியது. இக்கதையை எழுதியதில் இரு வருக்குமான நோக்குகள் வேறு. புரட்சியாளர் கள் கழுதைகளாகி கழுதைகள் கழிவோடைப் பன்றிகளாகும் காட்சியை வரலாற்றின் பல பக்கங்களில் பார்க்கலாம். ஈழ விடுதலையில் வேறெவரும் செய்த துரோகத்தைவிட இடதுசாரிகளின் துரோகம் தமிழினமென்று ஒன்று இருக்கும்வரை மன்னிக்க முடியாதது. அதனை விவாதிக்க புதிய கலாச்சாரம் உருவாக்கிய வாய்ப்பிற்கு மிக்க நன்றி. அது அடுத்த இதழில்.
தமிழ்வின்-ஐ பொறுத்தவரை சுருங்கிய கதை இதுதான். நடேசன்- புலித்தேவன் இன்னும் 171 போராளிகள் சரணடையும் ஏற்பாட்டினைச் செய்து அவர்கள் படுகொலையாகக் காரணமானவர்கள் நாங்கள் என்பதுதான் ஒருவரி கதை. முதலில் நடே சன்- புலித்தேவன் சரணடைவுச் சூழலை விவாதிக்கு முன் தமிழ்வின் போன்ற இணையதளக்காரர்கள் இதழியல் படித்தவர்களோ, தெரிந்தவர்களோ, தமிழீழ விடுதலை ஆர்வலர்களோ அல்ல. அவர்கள் வேறு தொழில் தெரியாத, தொழில் செய்யுமளவுக்கு எதுவும் படிக்காத, வியாபாரிகள். இன்று ஈழச்செய்திகள் விற்கின்றன, அவ்வளவுதான். விற்கி றார்கள். ஏதோ பிழைப்பு நடக்கிறது.
நடேசன் அவர்கள், வன்னி சென்றிருந்தபோது நான் பார்க்க முடியாமற் போனவர்களில் முக்கிய மானவர். புகைப்படங்களில் பார்த் தும், தொலைபேசியில் குரல் கேட் டுமே அவரைத் தெரியும். மிதவாதி -ஆனால் உறுதியானவர். இலங்கை காவல்துறையில் உயர் அதிகாரியாக முன்னர் கடமை யாற்றியவர், சிங்களப் பெண்மணியை வாழ்க் கைத் துணையாகக் கொண்டவர், சுப.தமிழ்ச்செல் வன் மறைவிற்குப்பின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பிரிவுக்குத் தலைவரானவர்.
முள்ளிவாய்க்காலுக்கு சில நாட்களுக்கு முன் என்.டி.டி.வி. தொலைக்காட்சி அமைத்த கருத்து மோதலில் எனக்கும் சுப்ரமணியசாமிக்குமிடையே நடந்த விவாதத்தை முள்ளிவாய்க்கால் சண்டைக் களத்து பங்கரில் இருந்து பார்த்து எனக்கு அவ் விரவிலேயே செயற்கைக்கோள் தொலைபேசியில் அழைத்து நன்றி சொன்ன நடேசன் என்ற ஆளுமையை நான் மறக்க முடியாது.
புலித்தேவன் ஓர் புத்திஜீவி. சிறு விஷயத்தையும் வலு சீரியஸாக எடுத்துக் கொள்பவர். வளர்ந்து வந்த அரசியல் சித்தாந்தி. எனது வானொலி நாட்களில் வன்னிக்களத்தின் முக்கிய செய்திகளுக்கு இவர்தான் எம் தொடர்பு. நான் வன்னி சென்றிருந்தபோது நீர்வழியில் உப்புக்கற்கள் உருவாகி கொஞ்சம் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அவரது மனைவியும் களப்போராளி. கத்தோலிக்க கிறித்தவர். கத்தோலிக்க கிறித்தவர்களாகிய நாங்கள் மேரி மாதா மீதான அன்பை வெளிப்படுத்த செபிக்கும் "செபமாலை' ஒன்று தனக்கு வேண்டுமெனக் கேட்டதும், பயணங்களின் போது எப்போதும் நான் வைத்திருக்கும் பிரான்ஸ் லூர்து மாதா திருத்தலத்து செபமாலையை அவருக்குத் தந்ததும் மறக்க முடியாதவை.
நடேசன், புலித்தேவன் தலைமையில் 171 போராளிகள் சரணடைய வந்த சூழல் என்ன? உண்மை யில் என்ன நடந்தது?
(நினைவுகள் சுழலும்)