SAS உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் இலங்கை படைகளுக்குப் பயிற்ச்சி! அதிர்ச்சித் தகவல்--காணொளி இணைப்பு
Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப் பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.
காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் தனியார் நிறுவனம் போலச் செயல்படும் கிருஸ் ரையன்இ இலங்கை சென்று இராணுவத்தினருக்கு அளித்த பயிற்சிகள் குறித்து இதுவரை காலமும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இலங்கை சென்று பலமாதகாலமாக அதிரடிப்படையினரை கடும் பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் கிருஸ், இவர் பார்வையில் விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இருப்பினும் அவர்களின் வலிமை போரிடும் திறமை, ஒரு இலக்கை அடைய உயிர்த்தியாகம் செய்தல், கொரில்லாத்தாக்குதல் என்பன தம்மை பிரமிக்கவைத்ததாகக் கூறுகிறார் கிருஸ்.
புலிகளின் தாக்குதலில் பல அதிரடிப்படையினர் கொல்லபட்டதும், சிறப்பு அதிரடிப்படையினர் பலர் காயமடைந்ததும் அவரை மிகவும் வியப்பில் ஆள்த்தியுள்ளதாம். விடுதலைப் புலிகள் போன்ற கடும் தாக்க்குதல் நடத்தக்கூடிய ஆயுதக் குழுக்களுடன் எவ்வாறு போர்புரிவது என இவர் இலங்கை அதிரடிப்படைகளுக்கு மாதக்கணக்காக பயிற்சிகளை வழங்கியிருக்கிறார். வன்னியில் போர் நடைபெற்ற காலங்களில் சிறப்பு அதிரடிப்படையினர், மற்றும் டாஸ்க் போர்ஸ் 7 என்ற அதிரடிப் படையினருமே பல முன் நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டம் கூட்டமாக ஆட்டுமந்தைகள் போல முன்னேறிவந்த இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை சந்தித்திருந்தவேளை, சிறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதல் நடத்துமாறு உக்திகளை வகுத்துக்கொடுத்தவரும் இவரே ஆவார்.மொத்தத்தில் உலகில் கிடைக்கக்கூடிய அனைத்து வழங்களையும் ஒன்றுதிரட்டி, இலங்கை அரசு போர் புரிந்துள்ளது, பாமர சிங்கள மக்கள் முதல் முகாம்களில் பணிபுரிந்த சிங்கள வேலைக்காரவரை, கிருஸ் ரையனைப் பற்றி வாய்திறக்கவில்லை.
ஒற்றுமை காக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இவ்விடையத்தை அறிந்திருந்தும் வாய்திறக்கவில்லை, அங்கும் சிங்கள ஒற்றுமை காக்கப்பட்டிருக்கிறது, போர் முடிவுக்கு வந்த பின்பும் கூட சிங்கள் ஒற்றுமை காக்கப்படுகிறது, ஆனால் தமிழர்கள் இடையே என்ன காணப்படுகிறது? சற்றே சிந்தியுங்கள், சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்கள் காட்டிக்கொடுப்பு இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் எமது இனம் பிளவுபட்டு நின்றது காரணமாக இருக்கிறது, சிங்களவன் வெற்றிக்குப் பின்னால் தமிழர்களின் ஒற்றுமையின்மை, பொறாமை இருக்கிறது.
இதுதான் சிங்களவன் வெற்றிக்கு காரணம்.எம் தமிழினமே இனியாவது விழித்தெழுவோம், இன்னும் நேரம் கடந்துவிடவில்லை, ஒற்றுமையாக ஒன்றுபட்டு தமிழீழம் அமைப்போம். சிங்கள அரக்கர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம். கொல்லப்பட்ட மக்களுக்கும், சிறையில் வாடும் எம் உறவுகளுக்காகவும் குரல்கொடுப்போம், இனியாவது ஒன்றுபடுவோம்.. ஓரினமாக !
0 comments:
Post a Comment