என்னையே இப்படி நடாத்துகிறார்கள் என்றால் அப்பாவி மக்களை அவர்கள் எவ்வாறு நடாத்தியிருப்பார்கள்--கனேடிய பா.உ
திரு பொப் ரே வெளியிட்ட அறிக்கையை அதிர்வு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்.ஜூன் 9, 2009 செவ்வாய்க்கிழமை மாலையில் டில்லியில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் மூலம் நான் இலங்கையை அடைந்தேன். இலங்கை உயர் தூதரகத்தில் எனது விசாவுக்காக வெற்றிகரமாக விண்ணப்பித்து இருந்தேன்,
அதேவேளை இலங்கைத் தூதுவர், இலங்கைக்கான கனடியத் தூதுவர் மற்றும் கனடா வெளிவிவகார சர்வதேச வர்த்தக அமைப்பின் அதிகாரிகளுடனும் இதுபற்றிக் கலந்துரையாடி இருந்தேன்.ஆனால், நான் இலங்கையை
அடைந்தபோது, தேசிய புலனாய்வின் அடிப்படையில் எனது வருகையானது மறுக்கப்பட்டுள்ளதாக சிறிது நேரத் தாமதத்தின் பின்னர் கனடியத் தூதரக அதிகாரிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர். அந்த நேரத்தில் இருந்து கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களாக எனது வருகை மறுப்புக்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டேன். இங்கும் (இலங்கை) ஒட்டாவாவிலும் உள்ள அதிகாரிகள் எனக்கு முழு ஆதரவு தந்தனர்.
ஆனால் என்னை லண்டன் செல்லும் விமானம் ஒன்றினுள் இலங்கை நேரம் பிற்பகல் 1.15 ஏற்றியுள்ளனர். எனவே நான் கனடாவிற்கு வியாழக்கிழமை வந்தடைவேன்.இலங்கை விவகாரங்களில் நான் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு மேலாக, ஐக்கிய ஸ்தாபன மன்றத்தின் தலைவராகவும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் தொடர்புபட்டுள்ளேன். அநேகமாக இலங்கை முழுவதும் பயணம் செய்து, அதன் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து பலதடவை உரையாடியுள்ளேன்.
சமாதானப் பேச்சுவார்த்தை நடந்த காலத்தில் புலிகளையும் சந்தித்துள்ளேன்.அடிக்கடி இலங்கைக்கு பயணம் செய்ததும் சமாதானத்துக்காக கனடாவில் வேலை செய்ததும் அமைதியான ஒரு தீர்வு பற்றி என்னைச் சிந்திக்க வைத்தது. அதற்காக நான் பல்வேறுபட்ட எண்ணங்கள் கொண்ட மக்களைச் சந்தித்தேன்.
புலிகளின் கடுமையான யுக்திகள் சரியான வழியைக் காண்பிக்கும் என்று ஒருபோதுமே நான் நினைத்ததில்லை. எனது பாராளுமன்ற வாதங்களில் இருந்துகூட இவற்றை மற்றவர்கள் அறிவார்கள். நான் ஒரு புலி ஆதரவாளர் என்று விவரப்பதற்கு, இராணுவப்பேச்சாளராக இன்று அவர் செய்தவை அனைத்தும் முழுமையான பொய்.நான் ஒரு மிதமான தமிழ் எண்ணவாதி மற்றும் தமிழ் அபிப்பிராய பேதம் பேசுபவன் என்றே எனது அறிக்கைகளை ஆராய்ந்தால் விளங்கிவிடும். மனித உரிமை மோசடிகள் பற்றி என்றுமே நான் விமர்ச்சிப்பவன், இதுபற்றி கனடாவிலும், வேறு பல நாடுகளிலும் நான் தயக்கமின்றிப் பேசியுள்ளேன்.
எனது தனிப்பட்ட நண்பர்களான லக்ஷ்மன் கதிர்காமர் மற்றும் கடேஷ் லோகநாதன் ஆகியோரின் நினைவு விழாக்களிலும் நான் பேசியுள்ளேன்.இந்த நாட்டின் மனிதாபிமான நிலமைகள் பற்றியும் எதிர்கால நிலமையைச் சரிசெய்தல் பற்றியும் விவாதிப்பதற்கு ஒருவருமே இங்கு என்னை அழைக்கமாட்டார்கள் என்பது தெளிவு. ஆனால் எனது கண்ணோட்டம் பற்றி விளங்கிக் கொண்ட இலங்கை எனக்கு வீசாவை வழங்கியது. ஆனால் இங்கு எனக்கான அனுமதி உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது என்பதைக் கேட்பதற்காக மட்டுமே நான் நீண்ட தூரம் பறந்து வந்துள்ளேன்.
என்னைப்பற்றி பொய்யான குறைபாடும், அவதூறும் பரப்பும் நோக்குடனேயே இலங்கை அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் இந்த முடிவானது 30 ஆண்டுகாலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சமூக சேவை செய்யும் என்னைப்பற்றி தப்பான அபிப்பிராயம் ஒன்றையும் பரப்பாது, மாறாக அவர்களின் சுய நடத்தையையே இது பிரதிபலிக்கப்போகிறது. கொடுமை, தீவிரவாதம் என்பவற்றை எதிர்த்து எனது வாழ்நாள் முழுவதும் போராடிவிட்டேன். எனது செயல்கள், பேச்சுக்கள், அறிக்கைகள் யாவும் அனைவரின் பார்வைக்காகவும் உள்ளன.
இன்றைய செயலில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இலங்கை பேசுவதற்குப் பயப்படுகிறது, விவாதிப்பதற்கு பயப்படுகிறது, சந்திப்புகளுக்குப் பயப்படுகிறது என்பனவே. அவர்களைப் பார்த்து வெட்கக்கேடு, அவமானம் என்று மட்டுமே என்னால் கூறமுடியும். என்னையே இவ்வாறு நடாத்தியுள்ளார்கள் என்றால், எதிர்த்துப் பேசமுடியாத, தமது கருத்துக்களை பொது அறிக்கைகளாக வெளியிட முடியாத அப்பாவி மக்களை அவர்கள் எவ்வாறு நடாத்தியிருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள், விளங்கும்.நான் கனடா திரும்பியதும் இன்னும் கூடுதலாகக் கூறுவேன், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment