Wednesday, June 10, 2009

பட்டிப்பாலைப் படுகொலைகள் நினைவில்...

இலங்கையின் தமிழருக்கெதிரான இன வன்முறைகளின் தொடக்க காலம்.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறப்படுகிற 1948 ஆம் ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளில் தமிழருக்கெதிராக பெரும்பான்மை சிங்களவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளின் தொடக்கமாக 1955 ஆண்டில் அன்றைய பிரதிநிதிகள் சபையில் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்க தனது பேச்சில் கிராமங்களிலாகட்டும் நகரங்களிலாகட்டும் சகல துறைகளும் அன்று தமிழர்களிடமே இருந்ததென்றும் இதனால் இதுவே வருங்காலத்தில் சிங்கள மொழிக்கு பாதகமாய் விடுமென்றும் குறிப்பிட்டிருந்தார்..

இதனைத் தொடர்ந்து ஜூன் 5, 1956 அன்று எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கவினால் தலைமைப்படுத்தப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும் என்கின்ற சட்டம் இலங்கைத் தீவெங்கும் நடைமுறைக்கு கொண்டுவரப் படுகிறது. இதனை எதிர்த்து அன்றைய தினம் தமிழர்களால் சிறிலங்கா பாராளுமன்றுக்கு வெளியே நடாத்தப்பட்ட வன்முறைகளற்ற போராட்டங்கள் சிறிலங்கா அரசின் ஆதரவுக்குள்ளான சிங்கள பெளத்த பிக்குகளாலும் சிங்கள காடையர் கும்பலினாலும் அடித்து நொருக்கப்பட்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகிறது...

இதன் தொடர்ச்சியாக தென் தமிழீழத்தில் அம்பாறை மாவட்டத்தில் பட்டிப்பாலைப் பிரதேசத்திலிருந்த ( இன்று சிங்களத்தில் கல்ஓயா) தமிழர்கள் மீது பாரிய அளவில் சிறிலங்கா பேரினவாத அரசின் ஆசியுடன் உள்ளூர் சிறுபான்மை சிங்களக் காடையருடன் சேர்ந்து பட்டிப்பாலை ஆற்றுக் குடியேற்றத்திட்டத்தில் பணியிலிருந்த சிங்களர் தாக்குதல் நாடாத்தி பலநூறு தமிழர்கள் படுகொலை செய்தனர்... சுமார் 5 நாட்கள் தொடர்ச்சியான இக்கலவரங்களில் தமிழருக்கெதிரான சிங்களவரின் தாக்குதலுக்கு வாகனங்களும் டைனமற் மற்றும் வெடிபொருட்களும் சிறிலங்கா அரசினால் வழங்கப்பட்டவைஎன்பது மறைக்க முடியாத உண்மை..


(தமிழ்ப் பயணி ஒருவர் வாகனத்திலிருந்து வெளியே இழுத்து விடப்பட்டு சிங்களரால் தாக்கப்படுகிறார்.)

ஜூன் 11 , 1956 அன்று மாலையளவில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தீவின் சுதந்திரத்துக்குப் பின்னான இந்த முதலாவது தமிழினப் படுகொலையில் தமிழரின் சொத்துகள் சூறையாடப்பட்டன,,தமிழருக்கெ
திராக சிங்களவரைத் தூண்டி விடுமுகமாக பொய்யான வதந்திகள் பரப்பபட்டன..

இதன் மூலம் சிறிலங்க இனவெறி அரசு தமிழரின் பூர்வீக நிலமான பட்டிப்பாலைப் பிரதேசத்தை சிங்களமயமாக்கி அங்கு புதிதாக சிங்களக் குடியேற்றங்களை நிறுவவும் தொடங்கியது...

ஏறத்தாள 55 ஆண்டுகள் கழிந்த நிலையில் ...இன்று ஓட்டு மொத்தமாக தமிழினம் துரத்தியடிக்கப் பட்ட நிலையில் தமிழீழத்தின் தென்முனை அம்பாறையின் பட்டிப்பாலை பிரதேசம் இன்று..கல்லோயா என சிங்களப் பெயர் கொண்டு குறிப்பிடப்பட்டு முற்று முழுதான சிங்கள குடியேற்றநிலமாகியிருக்கிறது.

இவ்வாறு தொடங்கப்பட்ட இலங்கைத்தீவின் தமிழருக்கெதிரான இனவன்முறைகள் கால நீட்சியில் ஆண்டுகள் அறுபதைத் தாண்டியும் தொடர்கின்றன,,,காலம் காலமாக வாழ்ந்து வந்த தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சிறிலங்காவால் அபகரிக்கப்பட்டு சிங்களர் சொத்துக்களாக்கப்பட்டன...பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்...

இழப்புகளே வரிகளாகிப் போன இற்றை ஈழத்தமிழனின் வாழ்வியல் வரலாற்றில் விடியல் வரும் ....மீண்டும் கிழக்கே சூரியன் எமக்காய் உதிப்பான் என்கிற நம்பிக்கையோடு,,,இந்நாளை ..இந்நாளில் இழந்த எம்முறவுகளை நெஞ்சில் நிறுத்துவோம்..

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP