Saturday, June 13, 2009

கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல!:இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
அதில் உள்ளதாவது : தி.மு.க. வினர் ஏற்கனவே வகித்து வந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் போராடிய தி.மு.க. தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, "பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதாக கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையல்லவா… பிரபாகரன் விடயத்தில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை…" என்று குறிப்பிட்டதாக தி.மு.க. நாடாளுமன்ற கட்சிவ ட்டாரம் கூறுகின்றது!

தமிழக முதல்வர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாக பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியில் நோக்கர்கள் கூறுகின்றனர்! இதன் அடிப்படையில் 'நெற்றிக்கண்' புலனாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன், சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனை கண்டித்தார்கள்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான் பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரன் உயிரோடு இருக்கின்றார் என்பதற்கு இது ஒரு நிரூபணம்! அடுத்து…

'மாவீரன்' பிரபாகரனின் கை விரல் ரேகை சென்னை போலீசாரால் 1982-ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பில் இருக்கின்றது.

கரிகாலன் என்பது – பிரபாகரனின் புனை பெயர்களில் ஒன்று. பிரபாகரன்-சிறிசபாரத்தினம் துப்பாக்கிசண்டை விபரம் அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்படுகின்றது. அவரது உத்தரவின்படி இந்த துப்பாக்கி சண்டை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகின்றது!

பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு (கமிசனர் ஆபீஸ்) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு டிஜிபி சண்முகம் பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தார்! பிரபாகரன், நிரஞ்சன், சிறிசபாரத்தினம் ஆகிய மூவரது கைவிரல் ரேகைகளும் அங்க-அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை டிஜிபி சண்முகம் பதிவு செய்தார்!

இதை தவிர பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப்பதிவுகளும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது!1986-ல் சென்னை – திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார் பிரபாகரன். பெசன்ட் நகரில் வீட்டுவசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு மாத்தையன் பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்! அந்த சமயம் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவுப்படி விடுதலைப்புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்! திடீரரென்று விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு! முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனை தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் கிட்டு மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிசனர் தேவாரம் தலைமையிலான குழு சுற்றிவளைத்து கைது செய்தது. சென்னை பொலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்! இவ்வாறு கொண்டு வரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும் எட்டு கோணங்களில் போலிசார் புகைப்படம் எடுத்தனர்! அடுத்த நாள் அதிகாலை இந்திய இராணுவ விமானத்தில் பிரபாகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு சிங்கள இராணுவத்திடம் சிக்கிக் கொள்ளாதவாறு இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

1982-ல் பாண்டி பஜாரில் போலிஸ் ஸ்டேசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனது கை விரல் ரேகைப் பதிவுகளும்….

1986-ல் சென்னை போலிஸ் கமிசனர் தேவாரம் எடுத்த எட்டு கோணங்களிலான புகைப்படமும்…

தமிழக 'க்யூ' பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது! தற்போது 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி – சங்கர் ஜுவால்!

சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்து கொள்ள இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவு பிரதமர் அலுவலக கட்டளைப்படி முயற்சிகளை மேற்கொண்டது!
அந்த அமைப்பின் தென்னிந்தியப் பகுதிக்கான இணை – டைரக்டர் விஜயசங்கர். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா தொடர்பான பிரச்சினைகளை இவர்தான் மேற்கொண்டுள்ளார்! இவரது அலுவலகம் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில் கமுக்கமாக செயல்படுகின்றது! பங்களா வாடகை ரூ.3 லட்சம்.

அந்த அமைப்பின் இணை – டைரக்ரர் விஜய சங்கர் தமிழக க்யூ பிராஞ்ச் ஐ.ஜி சங்கர் ஜுவாலை மே 18-ம் தேதி இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து 1982-ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரன் கைவிரல் ரேகைகளின் பிரதியையும் 1986-ல் எட்டு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்பட பிரதிகளையும் பெற்றார்!

பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர் தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடை அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்கு பறந்து சென்றார்! இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகாவை மே 19-ம் தேதி இரவு நேரில் சந்தித்தார். சிங்கள ராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கைவிரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று பொன்சேகா முன்னிலையிலேயே தன்வசம் உள்ள- தமிழகக் க்யூ பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிரபாகரனின் கைவிரல் ரேகைகளை தடைய அறிவியல் நிபுணர்களின் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்!

அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரேமாதிரியாக இல்லாததுடன் ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க அடையாளங்களும் ஒன்று கூட ஒத்துப்போகவில்லை!இந்திய அரசின் வெளிநாட்டு உளவு பிரிவான அந்த அமைப்பின் தென் இந்திய ஆணை டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இந்தியா திரும்பினர்!

இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி.வர்மா வழியாக, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பி வைத்தனர்!இந்த முழு விபரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல என்பது நிரூபணம் ஆகியுள்ளது!

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP