Friday, June 12, 2009

முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர் காப்போம்

முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர்வாழ்தலுக்கு யாரும் எவரும் உத்தரவாதமோ பாதுகாப்போ தர மறுத்துவிட்டார்கள்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்சபை மனிதநேய படுகொலையை செய்துவிட்டு தமிழர்களிடம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.

புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய கொள்கைகளையும் அதன் தலைவரின் நடுநிலைத்தன்மையையும் கேள்விக்குறியாகிவிட்டது.
அது அவ்வாறு இருக்க, சிறிலங்காவில் தமிழினப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.3லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு,அவர்களின் வாழ்தலுக்கான உத்தரவாதம் இல்லாமல் போயுள்ளது.நாள் தோறும் வதைமுகாம்களில் தெரிந்தெடுத்தலும்,வகைப்படுத்தலும்,காணாமல் போதலும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.

அங்கு வாழும் உறவுகளிடம் உயிர் ஒன்றைத்தவிர எதுவுமே இல்லை.

குண்டுச்சத்தங்கள்,மரண ஓலங்கள்,பட்டிணி,வலி,சாவு,சதைத்துண்டுகள்,இரத்த ஆறு,அழுகிய பிணங்கள் என மரண வேதனையில் வாழ்ந்த அந்த உறவுகள், போர் ஓய்ந்தும் அதே வலிகளோடுதான் வாழ்கிறார்கள்.குண்டுச்சத்தங்கள் மட்டும் இல்லை,அனால் கொலை நடக்கிறது.

நிரந்தரமான மனநோயாளிகளாக மாறிவிடும் கொடுமைகள் கூட நடந்துகொண்டிருக்கிறது.பிணம் தின்னும் கழுகளாக,வெறிநாய்களாக,நரிகளாக வதைமுகாம்களை சுற்றி வலம் வருகிறது பேரினவாத பேய்களும்,கோடாரிக்காம்புகளும்.

சர்வதேச மனித நேயத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டு,அவர்களை குருடர்களாக்கிவிட்டு தமிழினச்சுத்திகரிப்பை செய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச அரசு.இதைக்கேட்பாரும் இல்லை,பார்ப்பாரும் இல்லை.ஆனால் இந்தக்கொடுமைகளை உலக மக்களுக்கு சொல்லி அவர்களிடம் நியாயம் கேட்கும் பொறுப்பு ஒவ்வொரு புலம் பெயர் ஈழத்தமிழனின் கைகளில் உள்ளது.

எங்கள் உறவுகளின் நாக்குகள் அறுக்கப்பட்டு விட்டன.
அவர்களின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது.

விரல்கள் முறிக்கப்பட்டுவிட்டது.
கால்கள் முடமாக்கப்பட்டுவிட்டன.

அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிஉலகம் அறியக்கூடாது என்பதற்காக அவர்களின் குரல் வளைகள் நசுக்கப்பட்டு விட்டன.
இனி அவர்களால் எந்த நீதிமன்றத்திலும் சாட்சி சொல்ல முடியாது.

எவரிடமும் வாய் திறக்கவும் முடியாது.

எங்களை காப்பாற்றுங்கள் என்று சிங்களவன் காலில் விழுவதை தவிர அவர்களால் என்ன செய்ய இயலும்?அவனாய்ப்பார்த்து இரக்கப்பட்டு ஏதாவது செய்தால்த்தான் எம் உறவுகளின் உயிர் மட்டுமாவது காப்பாற்றப்படலாம்.

எல்லோராலும் கைவிடப்பட்ட பாவிகள் ஆனோம் நாம்?
எல்லோராலும் வஞ்சிக்கப்பட்ட ஈனப்பிறவிகள் ஆனோம் நாம்?
எல்லோராலும் பாவிக்கப்பட்ட கறிவேப்பிலைகள் ஆனோம் நாம்?

எமக்காக பரிதாபப்படவும் அனுதாபங்கள் தெரிவிக்கவும் தான் ஆயிரம் பேர் இருக்கிறார்கள்?ஆனால் எமக்கு நடந்த கொடுமைகளையும்,மனித நேயமற்ற கொலைகளையும் விசாரித்து நீதி சொல்ல எவரும் இல்லை.இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் காலம் ஒருநாள் பதில் சொல்லும்.காலத்தின் கணக்கில் எவனும் தப்பியது இல்லை.தர்மம் ஒருநாளும் தோற்றதும் இல்லை.உண்மைகள் ஒருபோதும் செத்ததும் இல்லை.

எது எவ்வாறு இருந்தாலும் எம் உறவுகளுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கை "புலம் பெயர்ந்து வாழும் அவர்களின் ஒரே ஒரு உறவுகள்- நாங்கள்".எங்களின் குரலுக்காகவும் உதவும் கரங்களுக்காகவும் காத்திருக்கும் அந்த உறவுகள்.என்றோ ஒரு நாள் தாங்கள் வதைமுகாம்களுக்குள் இருந்து வெளியே வருவோம் என்ற கனவோடு வாழும் அந்த உறவுகள்..!!!

என்ன செய்யப்போகிறோம் அவர்களுக்காக????
எப்போது செய்யப்போகிறோம் அவர்களுக்காக???
செய்தவை போதுமா???
இல்லை செய்ததில் பிழையா???

கேள்விகளை ஒருபுறம் வைத்துவிட்டு இன்று என்ன செய்யவேண்டும் என்பதை மட்டும் பார்ப்போம்.
தனிப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இப்போது செய்ய வேண்டியது என்ன?எல்லாம் இழந்து உயிரை மட்டும் கையில் வைத்து வாழும் எம் உறவுகளின் வாழ்தலுக்கான இருப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
அது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமை.
அதை இப்போதே செய்யுங்கள் .
இன்றே செய்யுங்கள்.அதற்கு ஒரு வழி உள்ளது.
இது சாத்தியமாகுமா?பிரயோசனப்படுமா? என்ற கேள்விகளிற்கு ஒரே ஒரு பதில் "செய்யப்பட்டிருக்கிறது.பிரயோசனப்பட்டிருக்கிறது".
அவ்வளவுதான்.

எம் உறவுகளே..!!!!

உங்கள் உடன்பிறப்புகள் அல்லது உறவுகள்,நண்பர்கள் யாராவது கடந்த 6 மாதமாக நிகழ்ந்த கொடிய போரினால் காணாமல் போய் இருந்தாலோ அல்லது அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ உடனடியாக நீங்கள் செய்யவேண்டியது என்ன?

செஞ்சிலுவை சங்கத்தில் இதற்கென ஒரு பிரிவு இயங்கிக்கொண்டிருக்கிறது.போரினாலோ இல்லை இயற்கை அனர்த்தத்தினாலோ உங்கள் உறவுகள் காணாமல் போயிருந்தாலோ இல்லை தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தாலோ அவர்களை தேடி கண்டு பிடித்து மீண்டும் உங்களுடன் இணைத்து வைப்பது இதுதான் அவர்களின் பணி.இவர்களுடைய இந்தப்பணியின் மூலமாக போரின் மூலமாகவும்,சுனாமி அனர்த்ததினாலும் காணாமல்ப்போன ஆயிரம் ஆயிரம் பேர் மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைகப்படிருக்கிறார்கள்.

வதைமுகாம்களுக்குள் கொடுமைகளை அனுபவித்து வாழ்தலுக்காக ஏங்கும் அந்த உடன் பிறப்புகளை உயிர் வாழ உதவுங்கள்.அவர்களை ஒரு நாள் உங்களோடு இணைத்து வாழ இது பெரிதும் உதவலாம்.அவர்கள் உயிரோடுதான் இருக்கிறர்கள்.எந்த உடல் நிலையில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சர்வதேச அங்கிகாரம் உள்ள ஆவணம்.இந்த ஆவணம் அவர்களின் எதிர்கால வாழ்வை உறுதிப்படுத்தும்.

உதாரணமாக அவுஸ்திரேலியாவில்,

இந்த இலக்கத்துடன் உடனடியாய தொடர்புகொள்ளுங்கள்:
tracing assistance,
our duty hours are 11.00am-3.00pm weekdays, except Tuesday.
Please Call 03 8327 7883 (victoria region),02 9229 4266(sydney)
தொடர்புகொள்ள முன் பின்வரும் விபரங்களை உங்களுடன் வைத்திருங்கள்.
காணாமல் போனவரின்
பெயர்:
தந்தை தாய் விபரம்:
பிறந்த திகதி/இடம்:
இனம்:
கடைசியாக வசித்த இடம்:
கடைசியாக உங்களோடு தொடர்புகொண்ட விபரம்:

இதில் மிக முக்கியமானது அவர்களின் முழுப்பெயரும்,அவர்களின் பிறந்த ஊரும் தான்.ஆனால் மற்றைய விபரங்கள் இருந்தால் அனுகூலமாகவிருக்கும்.

அன்பான என் உறவுகளே..!!!
தொடர்புகொள்ளுங்கள்.
மேலதிக இணையத்தள விபரங்களுக்கும் ஆதாரங்களுக்கும்:

http://www.icrc.org/
http://www.redcross.org.au/
http://www.redcross.lk/quicklinks.html#contact
http://www.redcross.int/
http://www.redcross.org/

Related News:
Sri Lanka: ICRC assists thousands of persons in government-run sites for the displaced
http://www.icrc.org/Web/Eng/siteeng0.nsf/html/sri-lanka-update-090609

Sri Lanka: displaced people anxious for news from families
http://www.icrc.org/Web/eng/siteeng0.nsf/html/sri-lanka-interview-270509

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP