“நலமாக இருக்கிறோம்” – பொட்டு அம்மான் தரும் உறுதி
வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.
இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.
இந்த வைபவம் குறித்து பாதுகாப்புத் துறையில் விசாரித்தபோது, “”போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு அறி வித்ததை அடுத்து, முகாம்களில் (திறந்த வெளி சிறைக் கூடங்கள்) தஞ்சமடைந் துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அரசு மேற் கொள்ள வேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தின. இதனை ஏற்று அதனை மேற்கொள்ள வன்னிப் பகுதி ராணுவத் தினருக்கு உத்திரவிடப்படும்னு நினைத் தோம். ஆனால் இதற்கு மாறாக, இறுதி நாளில் நடந்த “நிகழ்வுகளின்’ சாட்சியங் களை முற்று முழுதாக அழித்துவிட வேண்டுமென கொழும்பு தலைமையகத்தி லிருந்து கட்டளைப் பிறப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை ராணுவத்தினர் செய்து முடிக்கும் வரையில் முப்படைகளுடனான வைபவத்தை நிறுத்தி வைத்திருந்த அரசு, தற்போது அந்தப் “பணிகள்’ முடிந்துள்ள நிலையில் கொண்டாடியுள்ளது” என்று, கடந்த 10 நாட்களாக வன்னிப் பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட “பணிகளை’ விவரித்தார் வைபவத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவரே.
இந்த நிலையில், வன்னிப் பகுதியில் அரசு அமைத்துள்ள “முகாம்’களுக்கு (திறந்தவெளி சிறைக்கூடங்கள்) விசிட் அடித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் என் சில்வா, இலங்கை அரசின் கொடூரங்களைப் பகிரங்கப்படுத்தி யிருப்பது, மனசாட்சி உள்ளவர்களை உலுக்கியுள்ளது.
நீர்க்கொழும்பு மாவட்டத்தில் மாரவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட தலைமை நீதிபதி சரத் என் சில்வா, “”வன்னிப் பகுதியில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள “நிவாரண முகாம்’களுக்குச் சென்று வந்தேன்.
அங்கு தமிழர்கள் படும் துன்பங்களையும் வேதனை களையும் வார்த்தைகளில் என்னால் விவரிக்க இயலவில்லை. செட்டிக்குளம் முகாமிற்குச் சென்றபோது, அங்குள்ள தமிழர்களின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. ஒருவேளை கஞ்சிக்காக அவர்கள் ஏக்கத்துடன் இருந்தனர்.
இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட, 50 பேர், 60 பேர் நீண்ட வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியிருக்கிறது. முள்கம்பிகளால் சூழப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ள அந்த மக்கள், ஒரு பிரட் துண்டுக்காக பல நாட்கள் காத்துக் கிடப்பது கொடுமை.
மிகப் பிரமாண்டமான கட்டிடங்களையெல்லாம் நாம் கட்டியெழுப்புகிறோம். ஆனால், போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள், மிகச் சிறிய கூடாரங்களுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர். ஒரே கூடாரத்தில், 10 பேர் திணிக்கப்பட்டிருக் கிறார்கள். அந்தக் கூடாரத்தில் இந்த 10 பேரும் நிற்கத்தான் முடியும். உட்காரக் கூட முடியாது. கூடாரத்தை விட்டு வெளியே செல்ல முயன்றால், அவ்வளவு எளிதாக வெளியேறி விட முடியாது. அவர்கள் கழுத்து உடைந்துவிடும்.
மொத்தத்தில், வார்த்தைகளால் விவரித்து விட முடியாத கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர் அவர்கள். அவர்களுக்குப் போதுமான அளவில் நிவாரணம் வழங்க வேண்டும். உரிய நிவாரணங்களை அளிக்காவிட்டால் நாம் குற்றம் செய்தவர்களாகி விடுவோம். அந்தப் பழியை நாம்தான் ஏற்க வேண்டும்.
நமது நாட்டின் சட்டத்தின் மூலம் தமிழர்கள் நீதியை எதிர்பார்க்க முடியாது. தமிழர்களின் துயரங்கள் நீதிமன்றத் தின் முன் கொண்டு வரப்படவே இல்லை. “இலங்கையில் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்று இரண்டு இனம் இல்லை. ஒரே இனம்தான் இருக் கிறது’ என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதெல் லாம் பச்சைப் பொய்கள். இதனையெல்லாம் நான் பகிரங்கமாகவே வெளிப்படுத்துகிறேன். இப்படிச் சொல்வதன் மூலம் இலங்கை அதிகாரிகளால் நான் தண்டிக்கப்படலாம். கவ லையில்லை” என்று வன்னி முகாம்களின் நிலைமைகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார் தலைமை நீதிபதி.
விழா முடிந்து வெளியேறும்போது சக நீதிபதிகளிடம் மனம் திறந்த தலைமை நீதிபதி, “”முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதும், இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுவதும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து, அவர்களை ஒன்றிணைய விடாமல் தடுப்பதும் பற்றி அந்த மக்கள் விவரிக்கும் போது, என் நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது” என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வன்னி “முகாம்’ அவலங்களை தலை மை நீதிபதியே பகிரங்கப்படுத்தியிருப்பது இலங்கை அரசின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், “”பிரபாகரனை கொன்று விட்டதாக இலங்கை அரசு அவிழ்த்துவிடும் பொய்களை சிங்களவர் கள் நம்பலாம். தமிழர்களாகிய நாங்கள் நம்பவில்லை. கடைசி நாள் போரின் போது அங்கு என்ன நடந்தது என்பது அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தனி முகாம் களில் அடைந்து கிடக்கும் அவர்கள் யாருடனும் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். தனி முகாம்க ளில் உள்ள அவர்களோடு கருணாவின் ஆட்கள் ஊடுருவியிருப்பதால், பிரபா கரனைப் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் மௌனத் தையே கடைப்பிடித்து வருகின்றனர்” என்று வன்னிப் பகுதியிலிருந்து கிடைக் கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பிரபாகரன் பற்றிய பொய்யான தகவல்களை பரப்புவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ள இலங்கை அரசு, புலிகளின் புலனாய்வுப் பிரிவு (உளவுத்துறை) தலைவர் பொட்டு அம்மான் குறித்த தேடுதல் வேட்டை யைத் துவங்கியுள்ளது.
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பொய்யான செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்த சமயத்தில் “புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், கடற்படை தளபதி சூசை உள்பட முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப் பட்டு விட்டனர்’ என்று கொக்கரித்தது ராணுவம். இதையே, பத்திரிகையாளர்களிடமும் வெளிப்படுத்தினார் ராணுவ பேச்சாளர் உதயநாணயக்கார.
இதனை அடுத்து, பொட்டு அம்மான், சூசை உள்ளிட்டவர்களின் உடல்களைத் தேடி அலைந்தது ராணுவம். ஆனால் கிடைக்கவில்லை. “யாரோ ஒருவர் உடலைக் காட்டி இதுதான் பிரபாகரனின் உடல்’ என்று கூறியது போல, இவர்களுக்காகவும் அப்படி உடல்களை காட்டுவோமா என்று கோத்தபாய ராஜபக்சே அதிகாரிகளோடு விவாதித்தார். ஆனால் இதனை அறிந்த ராஜபக்சே “”கூடாது” என்று தடுத்து விட்டதால், அந்த நிகழ்வு நடக்கவில்லை. அதனால் பொட்டு அம்மானை பற்றி தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார் ராஜபக்சே.
இந்த நிலையில், (20-க்கும் மேற்பட்ட ஊடறுப்பு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டு பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பத்திரமாக வெளியேறிய சம்பவங்களை “பிரபாகரன் உயிருடன் உள்ளார்’ என்ற தலைப்பில் வெளியான நக்கீரன் இதழில் விரிவாகவே எழுதியிருந்தோம்).
தீவிர தேடுதல் வேட்டையில் இலங்கை ராணுவம் மட்டுமல்ல இலங்கை உளவுத்துறையும் இந்தியாவின் புலனாய்வு அமைப்பான “ரா’வும் ஈடுபட்டது. இந்த உளவு அமைப்பினர் “பொட்டு அம்மான் தப்பித்து விட்டார், அவர் கொல்லப்படவில்லை’ என்று அறிந்து அதனை ராஜபக்சே விடம் தெரிவித்தனர். இதனை அடுத்துதான், பத்திரிகையாளர்களை சமீபத்தில் மீண்டும் சந்தித்த உதயநாணயக்கார, “”பொட்டு அம்மான் கொல்லப் பட்டதாக சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை அல்ல. அவரை தேடி வருகிறோம்” என்று ஒப்புக் கொண்டார். இலங்கை பாதுகாப்புத் துறையும் இதனை வெளிப்படுத்தி யது. ஆனால், பொட்டு குறித்த எந்தத் தகவல்களும் அதற்கு மேல் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில் பொட்டு அம்மான் குறித்து நாம் விசாரித்தோம். கடந்த 10 நாட்களாக அமைதியாக இருந்த பொட்டு, செவ்வாய்க்கிழமை தனது உளவுத்துறையின் கீழ் சர்வதேச அளவில் செயல்படுபவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது, “”நலமாக இருக்கிறோம், பிறகு பேசுவோம்” என்று கதைத்துள்ளார். பொட்டுவின் குரலை கேட்டு நிம்மதி பெருமூச்சு விட்ட புலிகளின் உளவுப்பிரிவினர் தலைவர் பிரபாகரனைப் பற்றிக் கேட்டபோது, “”நானே நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் போது தேசிய தலைவர் இருக்க மாட்டாரா? நிம்மதியாக இருங்கள்” என்று தெளிவுபடுத்தியுள்ளார் பொட்டு அம்மான் என்பதாக நமக்கு வரும் தகவல்கள் சொல்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தொடர்ந்து தான் அளித்துவரும் பேட்டிகளில் “பிரபாகரன் இல்லை’ என்பது போலவே பதிவு செய்து கொண்டு வருகிறார். இது உலகத் தமிழர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டி ருக்கிறது.
இதுபற்றி புலிகளின் சர்வதேச தொடர்புகளில் நாம் விசாரித்தபோது, “”சர்வதேச நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. புலிகளின் செயல்பாடு களுக்கு இது மிகப் பெரிய தடை. அதனால் தான் அந்தத் தடை நீக்கப்பட தற்போது உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பிரபாகரன் இல்லை என்று அவர்கள் நம்பினால்தான் இந்தத் தடையை நீக்க உலக நாடுகள் முன்வரும். இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு, சுமுகமான சூழல் உலகம் முழுவதும் பரவுகிற நேரத்தில் திடீரென பிரபாகரன் தோன்றுவார் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
நன்றி நக்கீரன்
0 comments:
Post a Comment