கட்டுரைகள் பாகம் 2
திருநெல்வேலித் தாக்குதல்- செல்லக்கிளி அம்மான்
1983 ஜூலை 23 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளால் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலின் 26 ஆம் ஆண்டில் அத்தாக்குதலில் வீரச்சாவடைந்த தளபதி லெப். செல்லக்கிளி அம்மான் அவர்களின் நினைவு நாள் இன்று.
யுத்த க்ளைமாக்ஸ்! பிரபாகரனை நேரில் கண்ட எழுத்தாளரின் பேட்டி!
ஈழத்து எழுத்தாள ரான திருநாவுக்கரசு, நக்கீரன் வாசகர்களுக்குப் புதியவர் அல்ல. நன்கு அறி முகமானவர்தான். மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிவரும் சுற்றும்- முற்றும் தொடரில் திருநாவுக்கரசுவின் படைப்பாற்றல் குறித்து பதிவு செய்திருக்கிறார். தமிழீழத்தில் நடந்த இறுதிகட்டப் போர்வரை அங்கிருந்துவிட்டு, தற்போது தமிழகத்திற்கு தப்பித்து வந்திருக்கிறார் திருநாவுக்கரசு. அவரை சந்தித்தபோது, இறுதிநாள் நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சு முழுக்க ஈழத்தமிழர்களின் பாஷையிலேயே இருந்தது.
ராஜீவ்காந்தியை கொல்ல... சிங்கள ராணுவம் நடத்திய சதி: அம்பலப்படுத்தும் இலங்கையின் முன்னாள் ராணுவ ஜெனரல்
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ - இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கேயே அவரைக் கொல்ல சதி முயற்சிகள் நடந்தன.’ இலங்கையின் முன்னாள் கூட்டுப்படைத் தளபதியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் இருந்தவருமான ஜெனரல் சிரில் ரணதுங்க எழுதியுள்ள புத்தகத்தில் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
"பிரிகேடியர் பால்ராஜ்!"-மேலும் சில நினைவுகள்...
லீமாவின் குரல் கேட்டால் போராளிகளுக்கு எங்கிருந்தோ ஒரு உற்சாகம் பிறந்துவிடும். யாராலும் எதனாலும் அசைக்க முடியாத அசாத்தியமான துணிச்சல் பிறக்கும். எந்த நெருக்கடியான, அபாயம் நிறைந்த சூழ்நிலையிலும் லீமாவின் குரலைக் கேட்டால் போதும், அவர்கள் அந்த நெருக்கடியையோ அபாயத்தையோ மறந்து விடுவார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தவும் மாட்டார்கள். இப்படியே சொல்லிக் கொண்டு போகிறார் ஒரு பெண் போராளி பிரிகேடியர் பால்ராஜைப்பற்றி.இங்கே லீமா என்று அவர் குறிப்பிடுவது பிரிகேடியர் பால்ராஜையே. லீமா என்பது அவருடைய சங்கேதப் பெயர். போராளிகளிடத்தில் இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். பால்ராஜ் என்ற பெயர் விடுதலைப்புலிப் போராளிகளுக்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு ஆயுதமாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய உளவியலில்
'தெய்வீகத் துறவிகள்'
"பலவீனமான எமது இனத்தின் பலமான ஆயுதமாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்று கூறினார் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்.இன்று கரும்புலிகள் நாள்!
தமிழீழ விடுதலைப் போராட்டத் தேரின் நகர்வுப் பாதையில் - இறுமாப்போடு எழுந்து நின்ற தடைகளை எல்லாம் தகர்த்து எறிந்தவர்களுக்கான நாள்.எம்மை விழுங்கக் காத்திருந்த விசப் பூதங்களை எல்லாம் அகற்றி எமது விடுதலைப் பாதையினைச் செப்பனிட்டுத் தந்தவர்களுக்கான நாள்.தரை, கடல், வானம், தமிழீழத்திற்கு உள்ளே, தமிழீழத்திற்கு வெளியே என எங்கெங்கு எல்லாம் எமது பகைவர்கள் வீற்றிருந்தார்களோ - அங்கங்கு வைத்தே அவர்களின் ஆணிவேர்களைப் பிடுங்கியவர்களுக்கான நாள்.தமிழரது அரசியல் தாகத்தை இந்த உலகின் முற்றத்தில் முரசறைந்து சொன்னவர்களுக்கான நாள்.
இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற--புலனாய்வுப் போராளியின் மடல்.
தமிழீழ தேசத்தின் இரத்த உறவுகளான உங்கள் எல்லோரையும் இந்த மடல் மூலமாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.உங்களுடன் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கொஞ்சம், எதிர்கால நிகழ்வுகளை நீங்கள் எப்படி அணுகப் போகிறீர்கள் அணுகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையிட்டு எமக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன.அவற்றை நாங்கள் திறம்பட முறியடித்து மீண்டும் எங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போவோம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நீங்களும் அந்த நம்பிக்கையில் இருப்பீர்கள் என்பது எமக்குத் தெரியும்.
0 comments:
Post a Comment