Tuesday, May 5, 2009

கட்டுரைகள் பாகம் 1

புலிகள் தோற்கவில்லை. இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது! -பழ. நெடுமாறன்

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையைவிட இந்தியாவின் ராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் இந்துமாக்கடலின் முக்கியக் கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல!:இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி

நெற்றிக்கண் வாரபத்திரிகையின் இவ்வாரத்திற்கான வெளியீட்டில் "கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல… என்ற தலைப்பில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

விரிவாக>>

பட்டிப்பாலைப் படுகொலைகள் நினைவில்...

இலங்கையின் தமிழருக்கெதிரான இன வன்முறைகளின் தொடக்க காலம்.இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததாக கூறப்படுகிற 1948 ஆம் ஆண்டிலிருந்து 7 ஆண்டுகளில் தமிழருக்கெதிராக பெரும்பான்மை சிங்களவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகளின் தொடக்கமாக 1955 ஆண்டில் அன்றைய பிரதிநிதிகள் சபையில் எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்க தனது பேச்சில் கிராமங்களிலாகட்டும் நகரங்களிலாகட்டும் சகல துறைகளும் அன்று தமிழர்களிடமே இருந்ததென்றும் இதனால் இதுவே வருங்காலத்தில் சிங்கள மொழிக்கு பாதகமாய் விடுமென்றும் குறிப்பிட்டிருந்தார்..

புளியைக் கரைக்கும் 'பொட்டு'!--ஏமாற்றப்பட்டதா இலங்கை ராணுவம்?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

“நலமாக இருக்கிறோம்” – பொட்டு அம்மான் தரும் உறுதி

வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நடத்திய இறுதிநாள் போரில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், பாஸ்பரஸ் குண்டுகளால் படுகொலை செய்யப்பட்டனர். சுனாமியால் நிகழ்ந்த மனிதப் பேரவலங்களைவிட இலங்கை ராணுவம் நடத்திய இந்தப் படுகொலைகள் அதிக கொடூரமானவை.
இந்தப் படுகொலைகள் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உலகத் தின் புலனாய்விலிருந்து இதன் சாட்சியங் களையும் அடையாளங்களையும் அழிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு ராணுவத்தினரை முடுக்கிவிட்டார் ராஜபக்சே. அந்த பணிகளை முழுமையாகச் செய்து முடித்துவிட்டதாக ராணு வத்தினர் தற்போது தெரியப்படுத்தியுள்ளனர். இத னை அடுத்து, முப்படைகளை கௌரவிக்கும் வைபவத்தை நடத்தி முடித்துதான் அதன் அணி வகுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே.



லெப்டினன் கேணல் திலீபன்

தியாகி லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் பாரதப் படைகளுக்கெதிராக நீராகாரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் உண்ணா நோன்பிருந்து வீரச் சாவடைந்தவர்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை1-மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.2-சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.3-அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.4-ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.5-தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.



நிகழ்வுகளும் சில நிஜங்களும்...

அகிலத்தின் எந்த நாட்டிலும் எந்த மூலையிலும் நிகழ்ந்திராத மிகப் பெரிய மனிதப் பேரவலம் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்களினால் நிகழ்த்தப்பட்டதென்பது ஊரறிந்த உண்மை. அத்தோடு தமிழர்களின் சுதந்திர தாயகத்திற்க்கான ஆயுதப்போராட்டத்தை அழித்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தங்கள் ஊடகங்களில் மே மாதம் 18 ஆம் நாள் அறிவித்தது.
இந்தப் பேரவலத்திறக்கும், மனித உரிமைமீறல்கள் நிகழ்ந்தற்கும் பல சான்றுகள் இருக்கின்றது. உலகத்தின் உத்தமர்களெல்லாம் கூடும் ஐ நா சபையில் அகிலத்தையாளும் ஐயாக்கள் சிலர் இதுபற்றி ஆளுக்காள் அனுங்கினர். ஆனாலும் சிலரதை அண்டப்புளுகுகளால் அடக்கியதும், சிலரதை மணவறைச்சிரிப்புடன் மௌனங்காத்து மழுப்ப முயன்றதும் நீங்களெல்லோரும் அறிந்ததே. இது உலகறிந்த உண்மையும் கூட. ....

விரிவாக வாசிக்க>>

***********************************************************

ஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்

தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்-குர்து இனத்தவர் கடிதம்

கடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.

குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின் யாழ் பிரிவில் இருந்த பெண் போராளிகளின் படங்களைப் பார்த்து அவர்கள்மீது காதலும் கொண்டேன்!

***********************************************************


பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன்.

சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உங்களது 27 வருட பாட்டைப் பாடி அதனை இதற்கு ஒப்பிடுகிறீர்களே, உண்மையில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருக்கிறீர்கள் ?புரியவில்லை. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் பொதுமக்கள் எவரும் இல்லாத இடத்தில் புலிகளும் நீங்களும் மட்டும் இருந்த தீவில் நிகழ்ந்ததா? நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். நடந்தது எல்லாம் என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன என்று.

விரிவாக வாசிக்க>>

***********************************************************

0 comments:

  © Blogger templates Psi by Ourblogtemplates.com 2008

Back to TOP