தளபதிகளிடம் பிரபாகரன் வீர உரை -ஜெகத்கச்பர்
கடந்தவாரம் களமுனையில் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன் தளபதிகளை அழைத்து பின்வருமாறு கூறியதாய் தெரிய வருகிறது. ""ஆயுதங்களை ஒப்படைக்க ஒப்புக்கொண்டால் சண்டை நிறுத்தம் ஏற்படுத்த லாம் என முக்கியமான நாடுகள் கூறுகின்றன. ஆயுதங்களை ஒப்படைப்பதும் சரணடைவதும் தமிழீழக் கனவுக்காக நமக்கு முன் தம்முயிரை ஈதகம் செய்த எல்லா போராளிகளுக்கும் நாம் செய் கிற துரோகம் ஆகும். ஓர் இயக்கமாக நாம் நமக்கென சில நியதிகளையும், ஒழுங்குமுறை களையும், கட்டுப்பாடுகளையும் விதித்துக்கொண்டு அவற்றின்படியே நம்மை நடத்தி வந்தோம். அவ்வாறே இப்போதும் நடப்போம்.
நம்மை நம்பி, நமது வெற்றி தோல்விகள் யாவற்றிலும் நம்மோடு நடந்து வந்த இம்மக்களை எதிரியிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே என்ற கவலை மட்டும்தான் எனக்கு.
நிறையவே நமது மக்கள் துன்பப்பட்டுவிட்டார்கள். போராளிகள் என்ற வகையில் நாம் கௌரவமாக சண்டையிட்டு மடிவோம். இன்றைய வாழ்க்கை நமக்குரியதாய் இல்லாது போயினும் வரலாறு நம்முடையதாகவே இருக்கும். எத்தகைய உறுதியோடும், வீரத்தோடும், நேர்மையோடும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதிவரை போராடியது என்ற உண்மை இன்னும் பல்லாண்டுகளுக்கு நம் மக்களுக் கான போராட்டத்தை முன் நகர்த்திச் செல்லும்''... -இவ்வாறு பிரபாகரன் பேசியுள்ளார். மிகவும் நம்பகமான வழியில் இத்தகவல் பெறப்பட்டது.
நெஞ்செரிந்து, நம்பிக்கைகள் தகர்ந்துபோய் வெப்பியாரத்திலும் ஆற்றாமையிலும் சொல்கிறேன் -எந்த அரசியல் கட்சியும் ஈழத்தமிழர் அழியவேண்டு மென நினைக்கவில்லைதான். ஆனால் கண்ணெதிரே நடக்கும் இன அழித்தலை தடுத்து நிறுத்துவது முக்கியமா- தேர்தல் மற்றும் அதிகார அரசியல் முக்கியமா?
என்ற நிலை வந்தபோது தேர்தல் அதிகார அரசியலையே அத்தனை கட்சிகளும் தேர்வு செய் தன. அதனை விவாதித்து ஏற்கனவே இருக்கிற முரண் பாடுகளை மேலும் கூர்மையூட்ட நான் விரும்ப வில்லை. ஆனால் வாழ்வில் நான் மறக்க விரும்பும் அனுபவங்களில் ஒன்று விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்குமிடையே சண்டை நிறுத் தம் ஏற்படுத்த கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியை. நானும் அம்முயற்சியின் ஓர் சிறு அங்கமாக இருந்தேன், இரவெல்லாம் விழித்திருந்து கடமையாற்றினோம் என்பதால் எழுதுகிறேன்.
தமிழருக்கு கயமை செய்துவிட்டதாக பழி சுமத்தப்படும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கியமானவர்கள்தான் அந்த முயற்சி யை முன்னெடுத்தார்கள். பெரும் மனித அழிவு நேரு முன் எப்படியாவது சண்டை நிறுத்தம் ஏற்படுத்தி விடவேண்டும் என்ற அவர்களின் பதற்றத்தையும் படபடப்பையும் அருகிலிருந்து பார்த்ததால் இத னைக் கூறுகிறேன். அதே வேளை மேடைகளில் ஈழத்தமிழருக்காய் கண்ணீர் வடித்து விட்டு திரைமறைவில் இந்த அமைதி முயற்சி வெற்றிபெறக்கூடாது என்ற நோக்குடன் புலிகளுக்கு ஆலோசனை வழங்கிய தலைவர்களையும் நான் அறிவேன்.
"புலிகள் எக்கேடு கெட்டால் நமக்கென்ன' என்று அவர்கள் தனியே பேசியதையும், பேரழிவு நிகழ்ந்தால் அரசியல் லாபம் ஜோராயிருக்கும் என அவர்கள் கருதியதையும் நான் அறிவேன்.
ஒருநாள் காலம் வரும். மறக்க விரும்பும் அனுபவங்களாய் அவற்றை பதிவு செய்வேன்.
நல்லவர்களும், நயவஞ்சகர்களும் ஒருசேர எல்லா கட்சிகளிலுமே இருக்கிறார்கள். சாமான்ய னாகவும், ஏழையாகவும் இருக்கிற அக்கட்சிகளின் தொண்டர்களும் நல்லவர்களாகவே இருக்கிறார் கள். தலைவர்கள்தான் நமக்குத் துரோகம் செய்தனர்.
போர் நிறுத்தம் கேட்டு உயிர் போகும் வரை உண்ணா நோன்பு அறப்போர் நடத்தும் பேராசிரியர் சரசுவதி தலைமையிலான பெண் களை கடந்த சனிக்கிழமை ஓரமாய் நின்று பார்த்தேன். நேரில் பேசும் யோக்கியதை எனக்கு இல்லையென்றே நான் கருதினேன். என்னே உணர்வு! என்னே நேர்மை! என்னே துணிவு!
தமிழினத்தின் பொதுத் தாய்மை அடையாள மாகி நிற்கும் இப்பெண்கள் அறப்போர் நடத்த காணி நில அளவு இடம் கேட்டு மூன்று நாட்கள் பலருடனும் போராடித் தோற்றுப் போன அனு பவம் தந்தை பெரியாரின் தமிழகம் இன்றிருக்கும் நிலையை வலியோடு உணர்த்தியது. இப்பெண் களின் மகத்தான அறப்போரினை அத்தனை முன்னணி ஊடகங் களும் இருட்டடிப்பு செய்கின்றன. தந்தை பெரியாரின் உண்மையான பக்தர்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும் போல் இருக்கிறது.
பார்ப்பனீய எதிர்ப்பினை நீங்கள் மறுபரிசீலனை செய்யலாம். "பார்ப் பனீய எதிர்ப்பு' அரசியலூடாக புதுரக பார்ப்பனர்களாகவும் பெரும் பணக்காரர்க ளாகவும் மாறிவிட்ட வர்கள்தான் இன்று தமிழர்களுக்கு மோச மான எதிரிகள் என எண்ணுகிறேன். வியா ழனன்று திரைப்படத் துறையி லுள்ள ஈழ ஆதரவாளர்கள் முழுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் முயற்சி இது. உடல்நலக் குறைவிலும் இதற்காக ஓடியாடி உழைத்துக் கொண்டிருந்த இயக்கு நர் மணிவண்ணன் அவர்களையும், எவ்வித எதிர்பார்ப்பு களுமின்றி எதாவது நடந்து சண்டை நிறுத்தம் வராதா என்ற அங்கலாய்ப்போடு ஆலாய் பறந்து திரிந்து பணியாற்றிய உதவி இயக்குநர்கள் பலரையும் பார்க்க முடிந்தது. ஏழை மானுடத்தின் பழுதுபடா சாட்சிகள் இவர்கள். இவர்களைப் போன்ற பல்லாயிரம் இளைஞர் களை காலம் தமிழருக்காய் விட்டு வைத்திருக்கிறது நாளைய நம்பிக்கைகளாக.
"ஆஃப் தி ரெகார்ட்' பேசுவதை வெளிப்படுத்துதல் இதழியல் அறம் மீறும் செயல். ஆயினும் மனசாட்சியை பலநூறு முறை கேட்டு விட்டேன். பிரபாகரன் அவர்கள் மதிய உணவு இடைவேளையில் உரையாடிய சிலவற்றை இங்கு பகிர்தல் காலத்தின் கட்டளை எனக் கருதுகிறேன்.
விருந்தோம்பலில் வல்வெட்டித்துறை நன்மக்களை விஞ்சிட எவரும் இருக்க முடியாதனவே நினைக்கிறேன். பிரபாகரன் அவர்களின் பிரதான மனித பலவீனம் "சுவையான உணவு' என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சமாதான காலத்தில் அவரை சந்திக்கச் சென்ற எல்லோருக்குமே அவர் விருந்து படைத்து சந்தோஷப்பட்டிருக்கிறார். அவரே ஒரு தேர்ந்த சமையற்காரர் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொண்டார். நேர்காணச் சென்ற எனக்கும் விருந்து தந்தார். முல்லைத்தீவு கடலில் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிடைக்கும் "சிங்க வால்' இறால்களை "எனக்காக அவர் ஏற்பாடு செய்ததாய் பின்னர் தமிழ்ச்செல்வன் என்னிடம் சொன்னார். "எங்கட சனத்துக்காய் "உறவுப்பாலம்' நிகழ்ச்சி செய்த ஜெகத் கஸ்பர் ஃபாதருக்கு எனது சிறிய நன்றி வெளிப்பாடு' எனவும் கூறி யிருக்கிறார்.
வேரித்தாஸ் வானொலியில் நான் நடத்திய "உறவுப்பாலம்' நிகழ்ச்சிதான் தமிழீழ மக்க ளுக்கு என்னை அறிமுகப் படுத்தியது. இன்றுவரை யான என் வாழ்வின் மிகுந்த அர்த்தமுள்ள செயலாய் நான் கருதுவதும் இந்த "உறவுப் பாலம்' நிகழ்ச்சியைதான். அதுபற்றி விரிவாக பிறி தொரு தருணத்தில் பேசு வேன்.
மதிய உணவு இடை வேளையில் மனம் விட்டுப் பேசினார் பிரபாகரன். கிளிநொச்சியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் சாலையில் சுமார் 400 மீட்டர் தூரத்தில் இருந்தது அவரது சந்திப்பு களுக்கான அலுவலகம். வேப்ப மரங்கள் நிழல் தந்தன. தென்றல் வியர்வை துடைத்தது. பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவுமே இருக்கவில்லை. அருகில் நின்ற அரசியற்பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் "உங்கள் தலைவருக்கு நிறைய எதிரிகள் உண்டு. ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருப்பதுபோல் தெரிகிறதே' என்று மெதுவாகச் சொன்னேன். "மக்கள்தான் எங்கட தலைவருக்கு பாதுகாப்பு. சந்தேகத்திற் கிடமான யார் தென்பட்டாலும் அடுத்த நொடியே மக்கள் எங்களை எச்சரிப்பார்கள்' என்று கூறியவர், வேப்பமரக் கிளைகளின் இடைவெளியூடே தூரத்தில் தெரிந்த பனை மரங்களைக் காட்டி "எங்கட நிலத்திலெ பனைமரங்களும் பகைவர்களை கண்காணிக்கும்' என்றார்.
வேப்ப மர நிழலில் அமர்ந்து உரையாடல் தொடங்க, என்னுடன் வந்திருந்த ஒளிப்பதிவாளர் கேமராவை எடுத்தார். அப்போது பிரபாகரன் துறு துறு மாணவன்போல் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டு, "அந்த கேமராவெ பூட்டி பெட்டியிலெ வையுங்கோ... அப்போதான் கன விஷயங்கள் கதைக்க ஏலும்?' என்றார். அந்த ஒரு கணத்தில் அவரிடம் வெளிப்பட்ட கள்ளமில்லா வெள்ளை உள்ளம், குறும்புப் பார்வை, சிறுபிள்ளை மனது... நினைத்துப் பார்க்க மனம் கனக்கிறது.
""பாருங்கோ ஃபாதர்... கிட்டு என்ட சக போராளி மட்டுமல்ல, உயிர்த் தோழன். இயக்கத்திலெ எனக்கு என்ன இடமோ அதுபோல இடம் கிட்டுவுக்கும் உண்டு. கிட்டுவின்டெ சாவுக்கு இந்தியா காரணமென்டு எங்களுக்குத் தெரியும். நாங்கள் பழி வாங்கினமா?
""இந்தியப் பெருங்கடலிலெ, திரிகோணமலையிலெ எந்தெந்த நாடுகளுக்கு அபிலாஷைகள் இருக்கென்பது எங்களுக்குத் தெரியும். அவையளில் சிலர் இந்தியாவுக்கு எதிரான சக்திகளென்பதும் எங்களுக்குத் தெரியும். நாங்கள் நினைச்சிருந்தா இந்த சக்திகளோட ரகசிய பேரங்கள் செய்து கொண்டு எங்கட போராட்டத்தையும் சுளுவா வென்டிருக்கலாம். நாங்கள் ஒருநாள்தானும் அப்பிடி செய்ய நினைக்கேலெ. அப்பிடி செய்யவும் மாட்டம்''.
""இந்தியாவுக்குள்ளேயும் வெளியேயும் எத்தனையோ ஆயுதம் தாங்கிய குழுக்களும் சக்திகளும் இந்தியாவுக்கெதிரா இயங்கிக் கொண்டிருக்கிற விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஒருத்தரோடதானும் நாங்கள் இன்றுவரைக்கும் தொடர்பு எடுத்ததுமில்லெ, எடுக்கப் போறதுமில்லெ''.
""என்டைக்கானாலும் தமிழீழ மக்கள்தான் இந்தியாவுக்கு விசுவாசமா இருப்பினும் வரலாற்று ரீதியா சிங்களம் இந்தியாவுக்கு நம்பிக்கையா இருந்ததுமில்லெ, இருக்கப் போறதுமில்லை''.
பிரபாகரனின் இந்த வரிகள் தீர்க்கத் தரிசனமானவை. சிங்களப் பேரினவாதம் தமிழ்மக்கள் மீது வெறியோடு வெற்றிவாகை சூடத் துணைநின்ற இந்தியா ஒருநாள் நிச்சயம் வெகுவாக வருத்தப்படும்.
தன் தாயைப் பற்றி, போராளியாக தன் உணர்வுகள் பற்றி, தான் பயங்கரவாதியா என்பது பற்றியெல்லாம் அவர் கூறியவை...
0 comments:
Post a Comment