தமிழர்களின் சுதந்திரக் கனவு இன்னமும் மிச்சம் இருக்கிறது: 'ரைம்'
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரக் கனவு இன்னமும் மிச்சம் இருக்கிறது என்று சென்னையைச் சேர்ந்த கே.எஸ்.எஸ்.ராகவன் என்பவர் 'ரைம்' வார ஏட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் சுதந்திரத்துக்கான தேடலுடன் ராஜபக்சவின் பின்னால் வரும் தலைவர்கள் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் என்றும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.
'ரைம்' வார ஏடு அண்மையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நேர்காணலை வெளியிட்டிருந்தது. அது குறித்து ஏட்டின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்திலேயே ராகவன் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பௌத்த மதக் கொள்கைகளை மதிப்பவர், ஏற்றுக்கொண்டவர். புத்தரின் கொள்கைகள் வன்முறையற்ற வழிகளின் அடிப்படையிலானவை. ஆனால் சிலர் சொல்வதைப் பார்த்தால் அவரது படையினர் கசாப்புக் கடைக்காரனைப் போன்று நடந்துகொண்டுள்ளனர்.
இலங்கையில் தமிழர்கள் தமது மொழியையும் பண்பாட்டையும் பாதுகாப்பது ஒரு தவறா? பயங்கரவாதத்துக்கு எதிராகச் சண்டையிட்டபோது, களத்தில் சிறிலங்காப் படைகள் பொதுமக்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவு இழப்புக்களை ஏற்படுத்தியதை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருந்தது.
அங்கு என்ன நடந்தது என்பதை சுயாதீனமாக அறிந்து கொள்வதற்கு அனைத்துலகப் பார்வையாளர்கள் எவரையும் இப்போதுகூட மகிந்த ராஜபக்ச அனுமதிப்பதில்லை. அங்கு ஊடகங்களின் வாய்கள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் தமிழர்களின் கனவு இன்னமும் மிச்சம் இருக்கிறது. ராஜபக்சவுக்கு அடுத்து வரும் அரச தலைவர்கள் அந்த சுதந்திரத்துக்கான தேடலுடன் நிச்சயம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கும் அவர் தனது வாசகர் கடிதத்தில் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment