அஞ்சாதே! -பேசுகிறார் பிரபாகரன்
1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: ""அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது''.
ஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.
எனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.
எப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, ""அறியப்படாத வீரனுக்காக''. பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்ற விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.
வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. ""எப்படியிருக்கிறது உன் விடு தலை?'' என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: ""வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.''
அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் - ""இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்...?'' அப் போதும் அவன் பதில் சொல்வான்: ""வலி தாங்க முடியவில்லைதான்... ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது''.
ஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் - ""நாயே... சாகப்போகிறாய்... இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா?'' உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். ""ஐயா... உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் சுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்'' என கூறிக் கொண்டே "சுடுக' என்கிறான்.
பைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: ""உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்'' முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா? உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை? உண்மை தான்... உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.
மே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : ""அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.
""தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.
குறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.
தமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம் தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.
எமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.''
உண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment