அர்ப்பணிப்பு உணர்வு தேவை!
"அமுது மாஸ்டர்' என தமிழ் ஈழ மக்களால் அன்புடன் அறியப்பட்ட கவிஞர் இளவாலை அமுது அவர்கள் கடந்த வாரம் லண்டன் மாநகரில் காலமானார். முள்ளிவாய்க்கால்துயரங்களின் வலிகளையும், விடுதலைப்போராட்டம் சந்தித்த பெரும்பின்னடைவுக்குப்பின் நிலவும் நம்பிக்கை வறட்சியினையும் தாங்க முடியாதுதவித்து உழன்று விடைபெற்றுக் கொண்டிருக்கும் பலருள் இவரும் ஒருவரானார்.யாழ்ப்பாணத்தில் நேசிக்கப்பட்ட தமிழாசிரியர், எல்லோரையும் நேசிக்கத்தெரிந்தவர், எல்லோரையும் நேசிக்கிற ஆற்றலும் கொண்டிருந்தவர்.
1998 தொடங்கி அமுது மாஸ்டரை தெரியும். அமுதப்பா என்றுதான் அழைப்பேன்.லண்டன் சென்றால் அவருடன் உணவருந்தி நீண்டு உரையாடுவது பயணத்திட்டத்தில்மிக முக்கியமானதாயிருக்கும். ""சீவன் போறதுக்கு முன்னே ஈழம் காணோணும்சுவாமி'' என்று அடிக்கடி கூறுவார்.
அமுது மாஸ்டர் நடிகர் திலகம் சிவாஜிபோல "செவாலியே' விருது பெற்றவர். நல்லகவிஞரும்கூட. 2002-ம் ஆண்டு கவிதை நூலொன்று வெளியிட்டார். "அமுதுவின்கவிதைகள்' என்பது பெயர். புத்தக வெளி யீட்டிற்கான எனது பயணத்திட்டம்மணிலா, கொழும்பு, வன்னி, யாழ்ப்பாணம், மீண்டும் கொழும்பு- லண்டன் என்பதாகஇருந்தது. கொழும்பு நகரில் தங்கியிருந்த நாளின் மாலைப் பொழுதில் "கால்பேஸ்' தங்கும் விடுதியில் கடலை நோக்கி நின்றுகொண்டு அவரது கவிதைபுத்தகத்தைப் படித்து ஓரிரு கவிதைகளுக்கு இசையும் அமைத்த அனுபவம் மறக்கமுடியாதது.
""காலக் கடல் கடந்து, கண்போல மண்காத்து, நீடு வழி வந்தவரே நெஞ்சார்ந்தஅஞ்சலிகள்... வீரத்தை பத்து விரல்களிலே ஏற்றி வைத்து, விடுதலைத் தேரைஇழுத்து வந்த மாவீரர் வாழியவே...'' என்று தொடரும் அவரது கவிதையை இங்குஎழுதும்போதே கடலலைகள் தாலாட்டும் பின்புலத்தில் இசையாய் நினைவுகள்மலர்கின்றன. தவிப்பாய், அழுத்தும் இனம்புரியா சுகமாய், சகலமும்தகர்ந்துபோய்விட்ட வலியாய்.
நண்பர்கள் பலருக்கும் புரியாத புதிர், பொதுவாக கலை -பண்பாடு -அறிவுசார்விஷயங்கள், சமூகப்பணி என இயங்கும் நான் ஈழப் பிரச்சினையாகிய "சென்சிடிவ்'விஷயத்தில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருவது. அவர்களுக்கு நேரிடையாகஇதுவரை நான் பதில் கூறியதில்லை. இதுதான் பதில் : ""இன்றுவரையில் சுமார்முப்பத்தேழாயிரம் போராளிகள் தமிழீழக் கனவுக்காய் தம் இன்னுயிரை ஈகம்செய்திருக்கிறார்கள். இவர்கள் சிங்கள மக்களை வெறுத்தவர்களல்ல. தம் இனத்தைநேசித்தவர்கள். இந்துவோ, கிறித்தவரோ, இசுலாமியரோ, சீக்கியரோ தம்மதத்திற்காக, மதத்தின் கொள்கைகளுக்காக தமது இன்னுயிரைக் கையளித்தால்அவர்களுக்கு பரலோக வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையேனும் மிச்சமுண்டு. ஆனால்இம்மாவீரர்களுக்கோ -தமது மக்கள் எதிர்காலத்தில் ஈழம் என்ற சுதந்திரதேசத்தில் உரிமை பெற்ற மக்களாய் வாழ்வார்கள்'' என்ற நம்பிக்கையைத் தவிரவேறெதுவும் இல்லை.
அந்த முப்பத்தேழாயிரம் போராளிகளினதும் ஆத்மாக்கள் அமைதி பெறுவதென்றால்-ஒன்றேல் தமிழீழம் வரவேண்டும் அல்லது எத்தகைய உரிமைகள், மாண்பு நிலைக்காகதமிழீழக் கனவு வனையப்பட்டதோ அவை நிறைவேறுகிற ஓர் அரசியல் -நிர்வாக-பொருளாதார -பண்பாட்டு ஏற்பாடு அம்மக்களுக்கு அங்கு அமைய வேண்டும்.நாட்களாகலாம். ஆண்டுகள் ஆகலாம். தலைமுறைகள் தாண்டிக்கூடப் போகலாம். ஆனால் அம்மாவீரர்களின் தியாகங்கள் விழலுக்கிறைத்த நீராய் வீணாகப்போய்விட நாம்அனுமதிக்க முடியாது. அந்த ஒரே ஒரு அடிப்படையில் நின்றுதான் எனதுஇயங்குதல், செயற்பாடு.
எப்படி மறந்துவிட முடியும்? ஆனை யிறவுப் போருக்காய் வரலாற்றுத் தளபதிபால்ராஜின் தலைமையில் ஆ9 நெடுஞ் சாலையை ஊடறுத்து இடை மறிக்க வேண்டிய-உண்மையில் ஆனையிறவுப் போரின் இறுதித் தலைவிதியை தீர்மானிக்கப் போகிறசிறப்புத் தாக்குதல் படையணி தயாராகி நிற்கிறது. அவர்களைப் படகுகளில் ஏற்றிதாளையடி- செம்பியன்பற்று பகுதியில் இறக்கிவிடும் பெரும் பொறுப்பில்கடற்படைத் தளபதி சூசையின் கடல் அணிகள் வரிந்து நிற்கின்றன. ""பால்ராஜ்,சூசை உங்களை கொண்டுபோய் இறக்கித்தான் விடுவான். தாக்குதல் பிழச்சுப்போனாகாப்பாற்றவோ, புது விநியோகம் தரவோ எங்களால வர ஏலாது. ஆனையிறவில்சந்திப்போம்'' என்று தலைவர் பிரபாகரன் வழியனுப்பி வைக்கிறார்.
தாளையடி-செம்பியன்பற்றில் தரையிறங்கும் போதே சண்டை தொடங்கிவிட்டது.சிங்களத்தின் சுமார் பதினைந்து டோரா படகுகள் தரையிறங்கும் புலிகள் மீதும்,இறக்கிவிட வந்த படகுகள் மீதும் பீரங்கி, துப்பாக்கிக் குண்டு மழையாய்பொழிகின்றன. உணவுப்பொருட்கள் ஏற்றிவந்த புலிகளின் ஓர் படகு அடிவாங்கிவிடுகிறது. அதிலிருந்தவர்களில் இரு போராளிகள் வீரமரணம்அடைகிறார்கள். அவர்களின் வித்துடலைத் தாங்கியவாறே எஞ்சிய போராளிகள்படகையும் உணவுப் பொருட்களையும் காப்பாற்றி கரை சேர்க்கிறார்கள். அவர்களில்ஒரு போராளி பின்னர் எழுதிய கடிதத்தின் வரிகள் மறக்கவே முடியாதவை.
""ஃபாதர்... எங்கட தோழர்கள் இருவரின் ரத்தமும் சதைத்துண்டுகளும் உணவுப்பொருட்களோடு கலந்துவிட்டன. நினைத்துப் பாருங்கள், அப்படியான உணவை சாதாரணமனநிலையோடு சாப்பிட முடியுமா என்று. நிச்சயம் மனித உணர்வு உள்ளவர்களால்முடியாது. ஆனால் நாங்கள் அந்த உணவை தண்ணீ ரால் கழுவிச் சாப்பிட்டோம்.பசியை ஆற்றுவதற்கல்ல ஃபாதர். ஆனையிறவை வெல்லும் வெறி. ஆனையிறவை வென்றால்தமிழீழத்திற்கு அருகில் வந்துவிட முடியுமென்ற வெறிதான் எங்கள் தோழர்களின்ரத்தமும் சதையும் கலந்த உணவைக்கூட சாப்பிடும் மன உறுதியைத் தந்தது.''
ஆம், தமிழீழத்திற்காய் தம்முயிர் ஈந்த அப்போராளிகளின் உண்மையான மனவெளியைநம்மால் தரிசிக்க முடியுமென நான் நினைக்கவில்லை. 1992-ம் ஆண்டு மாவீரர்தின உரையில் பிரபாகரன் அவர்களது மறக்க முடியா வரிகளை இத்தருணத்தில்எண்ணிப் பார்க்கிறேன்.
""மனித வாழ்வில் சுதந்திரம் உன்னத மானது; மனித நற்பேறுகளில் தலைசிறந்தது;மனித வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் ஆதாரமானது. சுதந்திரம்தான் மனிதவாழ்விற்கு அர்த்தத்தைக் கொடுக் கிறது; முழுமையைக் கொடுக்கிறது. மனிதஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கிறது.''
வரலாற்றுச் சிறப்புமிகு அந்த மாவீரர் தின உரையை பிரபாகரன் அவர்கள்பின்வருமாறு நிறைவு செய்தார் : ""நாம் தொடர்ந்து போராடுவோம். எத்தனை இடர்வரினும், எத்தனை துயர் வரினும், நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தைத்தொடருவோம். எமது மக்கள் சிந்திய ரத்தமும், எமது மாவீரர் புரிந்த தியாகமும்வீண் போகாதிருக்க நாம் உறுதி தளராது போராடுவோம். எமது இலட்சியப் பயணத்தில்எத்தனையோ சவால்களை, ஆபத்துகளை, நெருக்கடிகளை நாம் சந்தித்துவிட்டோம். இனிஎம்மை எதுவும், எவரும் அச்சுறுத்த முடியாது. நாம் துணிந்து போராடுவோம்.வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கிறது, சத்தியம் எமக்குச் சாட்சியாகநிற்கிறது.''
""எமது சுதந்திர இயக்கத்தின் தூண்களாய் நிற்கும் மாவீரர்களே! உங்கள்ரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகிறது. உங்கள் இலட்சியநெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகிறது. உங்கள் தியாகத்தால்எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி,வைரம் பெறுகிறது. எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை நாம்சிரந்தாழ்த்தி வணங்குகிறோம்.''
மாவீரர் மீது இதே உணர்வுகளை சுமந்தே நேர்காணலின் போதும் அவரை நான் வினவினேன்:
ஜெகத் : ஒரு போராளியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பிரபாகரன் : போராட்டம் என்பது ஓர் கூட்டு முயற்சி. இதில் தனி மனிதர்கள்மட்டுமே எதுவும் செய்திட முடியாது. ஒவ்வொரு போராளியினதும்பங்களிப்பில்தான் இந்தப் போராட்டம் வெல்லுது. நாங்கள் திட்டங்கள் நன்றாகப்போட்டால்கூட அந்தத் திட்டங்களை செயற்படுத்துவது ஒவ்வொரு போராளி யும்தான்.போராளிகள் யுத்தங்களுக்குப் போகும்போது வகுப்புகள் எடுக்கையில்கூடஇதனைத்தான் நான் சொல்வேன். நூறுபேர் ஒரு சண்டைக்குச் சென்றால் நூறுபேருமேஅர்ப்பணிப்போடு போராடினால்தான் அச்சண்டை வெற்றிபெறும். அதில் சிலர்சரியில்லை யென்றால் கூட பெரிய தோல்வியை சந்திக்க நேரிடும். எனவே போராட்டம்என்பது கூட்டு முயற்சி. எல்லோரும் சமமான அர்ப்பணத்தோடு போராடு கின்றனர்.அதன் விளைவாகத்தான் ஒவ்வொரு வெற்றியும் கிடைக்கிறது.
ஜெகத் : போராளிகளின் மரணம் உங்களை ஆழமாக பாதிப்பதுண்டா?
பிரபாகரன் : போராளிகளின் மரணங்களைப் பொறுத்தவரை அது பெரிய பாதிப்பைஎனக்குள் ஏற்படுத்துவதில்லை. ஏனென்றால் அது ஒரு அர்த்தமுள்ள இழப்பு. அதுஅர்த்தமற்ற வீணான சாவு அல்ல. அந்தச் சாவின் பின்னால் ஒரு பெரியவாழ்விருக்கிறது. அதாவது எங்களுடைய விடுதலை வாழ்விற்காகத்தான் தங்களுடையஉன்னதமான உயிர்களை அவர்கள் அர்ப்பணிக்கிறார்கள். எனவே அந்தச் சாவு ஒருபயத்துடன், துக்கத்துடன் பார்க்க வேண்டிய விஷயமல்ல. அவர்களது சாவின்மூலமாகத்தான் எங்களது சுதந்திரம் கட்டியெழுப்பப்படுகிறது. அதன்மூலமாகத்தான் நாங்கள் எங்களுடைய பூரண விடுதலையை அடையப் போகிறோம். அவர்களது சாவுபின்னர் எம் மக்களுக்கு வரக்கூடிய வளமான வாழ்வுக்கான தியாகம். எனவேதான்நாங்கள் எங்களுடைய போராளிகளை விதைகுழியில் விதைக் கின்றோம் எனச்சொல்கிறோம். ஏனென்றால் அவர்கள் சாகவில்லை. அவர்கள் விதையாகிப் போகின்றனர்.அந்த விதையின் முடிவு ஓர் பெரிய விருட்சமாக, எங்க ளுடைய நாடாகஅமையப்போகிறது.
ஜெகத் : தற்கொலைப் போராளியாக செல்லவேண்டிய ஒரு சூழ்நிலை வந்தால் நீங்களே அவ்வாறு ஓர் தற்கொலைப் போராளியாகச் செல்வீர்களா?
(நினைவுகள் சுழலும்)
0 comments:
Post a Comment