செய்திகள்
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது : அருட்தந்தை ஜெகத் கஸ்பார்
'நக்கீரன்' குழுமத்தின் 'இனிய உதயம்' காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:
தேசியத் தலைவரின் சிந்தனைகளுக்கு அமைவாக எமது போராட்ட நகர்வுகளை பத்மநாதன் வழிநடாத்துவார்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு
வரலாற்றின் தேவை கருதி - பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப - புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் - எமது இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மீள்-ஒழுங்கமைப்புச் செய்யப்பட்டுள்ளது.நீண்ட - விரிவான - ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் இறுதியாக எமது நிர்வாகச் செயற்குழுவால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுக்கு அமைய எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளரான செல்வராஜா பத்மநாதன் அவர்கள் - இனிவரும் காலத்தில் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைகளுக்கு அமைவாக போராட்ட நகர்வுளை வழிநடாத்திச் செல்வார் என்பதை எமது அன்புக்குரிய மக்களுக்கும், இந்த உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாக அறியத்தருகின்றோம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."இறுதிவரை நான் களத்திலேயே நிற்கிறேன்" என உறுதியாக சொல்லிவிட்டார் பிரபாகரன்: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி
சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. 'சரணடைவதைவிட சாவதே மேல்' என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.வன்னிப் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் கொத்துக் குண்டுகள், தமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் வதை முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகத்தில் கரையேறியிருக்கிறார்..!12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி?
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது.தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம்.தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கைவிடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத்தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.SAS உலகப்புகழ் பெற்ற கிருஸ் ரையன் இலங்கை படைகளுக்குப் பயிற்ச்சி! அதிர்ச்சித் தகவல்--காணொளி இணைப்பு
Chris Ryan)கிருஸ் ரையனை இராணுவ மற்றும் போலீஸ் மட்டத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். உலகப் புகழ்பெற்ற மற்றும் பரபரப்பாகப் பேசப்படும் இவரது இராணுவப் பயிற்சிகள் மற்றும் நூல்கள் என்பன உலகப்பிரசித்தி வாய்ந்தவை. தற்போது இவர் தாமாகவே முன்வந்து, இலங்கை அதிரடிப்படையினருக்கு தாமே பயிற்சிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்து பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளார்.காணொளிகளுடன் கூடிய இராணுவ பயிற்றுவிப்புகளை படமாக்கி, தான் எவ்வாறு இலங்கை இராணுவத்தையும், அதிரடிப்படையினரையும் போருக்கு தயார்செய்தார் என்பதை விளக்கும் காட்சிகளாக பிரசுரித்துள்ளார் கிருஸ்.விடுதலைப் புலிகளுடனான போரின் போது பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உதவிபுரிந்தது யாவரும் அறிந்த உண்மை இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் தனியார் நிறுவனம் போலச் செயல்படும் கிருஸ் ரையன்இ இலங்கை சென்று இராணுவத்தினருக்கு அளித்த பயிற்சிகள் குறித்து இதுவரை காலமும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?
எப்படி தப்பினார் மதிவதனி?--பிரபாகரன் போட்ட உருக்கமான கட்டளை...
இந்திய 'ரா' உளவு அமைப்பினர், லேட்டஸ்டாக வேறொரு தகவலையும் டீல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
'சுற்றி வளைக்கப்பட்டோம். நடப்பது இறுதித் தாக்குதல்...' என்று பிரபாகரன் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அவருடைய மனைவி மதிவதனி எவ்வாறு திட்டமிட்டபடி கொல்கத்தா வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதே அவர்களுக்குக் கிடைத்த அந்தத்தகவல். இந்தியாவின் உள்துறை உளவு அமைப்பான ஐ.பி-யில் பணியாற்றி, தற்போது 'ரா'வின் தெற்காசிய விவகாரங்களை கவனிக்கும் முக்கிய அதிகாரி ஒருவரிடம் இதுபற்றிப் பேசினோம்.
யாழ்ப்பாணக் குறிப்பேடு
அநாமதேயன்
யாழ்ப்பாணம்
20.03.2009
இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதையநிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியைஅனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக்குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்தபின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதிஉங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால்காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும்பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம்முகப்பில் வெளியான 'ஆனந்த விகட'னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம்புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச்சிறையிலடைக்கப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதுதான் ஈழத்தின் இன்றையநிலவரம்.
வவுனியா வதைமுகாமில் இருப்பதைவிட வன்னியில் செல்லடிபட்டு செத்திருக்கலாம்: தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர் மடல்
வன்னியில் கொட்டும் குண்டு மழையில் இருந்து விட்டு வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமில் இருப்பதுதான் கடினமாக உள்ளதாக தமது வேதனைகள் நிறைந்த இன்றைய அகதிமுகாம் வாழ்க்கையை பற்றி கண்ணீரும் இரத்தமும் சிந்திய வரிகளாக்கி தமிழகத்தில் இருக்கும் உறவுக்கு எழுதிய கண்ணீர்மடல்.வழக்கமான சுக விசாரிப்புக்களுடன் தொடங்கும் கடிதம் ஒரு கட்டத்தில் நகர மறுக்கின்றது… வார்த்தைகள் கனக்கின்றன… நா தழுதளுக்கின்றது… கண்கள் நமது கட்டுப்பாட்டை மீறி தாரை தாரையாக கண்ணீர் சிந்துகின்றது. சிரமப்பட்டு வாசித்த போது…
10மீட்டர் தூர இடைவெளியில் வீழ்ந்து வெடித்து சிதறிய செல்வீச்சில் இருந்து அதிஸ்டவசமாக உயிர்பிழைத்து வவுனியா செட்டிக்குளம் அகதிகள் முகாமிற்கு வந்த பின்னர்தான் யோசிக்கின்றோம். அங்கேயே இருந்து செல்லடிபட்டு செத்திருந்தாலும் பறவாயில்லை போலிருக்கு.
முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர் காப்போம்
முட்கம்பிவேலியில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் எம் உறவுகளின் உயிர்வாழ்தலுக்கு யாரும் எவரும் உத்தரவாதமோ பாதுகாப்போ தர மறுத்துவிட்டார்கள்.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச்சபை மனிதநேய படுகொலையை செய்துவிட்டு தமிழர்களிடம் வெட்கித்தலைகுனிந்து நிற்கிறது.புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய கொள்கைகளையும் அதன் தலைவரின் நடுநிலைத்தன்மையையும் கேள்விக்குறியாகிவிட்டது.
அது அவ்வாறு இருக்க, சிறிலங்காவில் தமிழினப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.3லட்சத்துக்கும் அதிகமான தமிழ்மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு,அவர்களின் வாழ்தலுக்கான உத்தரவாதம் இல்லாமல் போயுள்ளது.நாள் தோறும் வதைமுகாம்களில் தெரிந்தெடுத்தலும்,வகைப்படுத்தலும்,காணாமல் போதலும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.
என்னையே இப்படி நடாத்துகிறார்கள் என்றால் அப்பாவி மக்களை அவர்கள் எவ்வாறு நடாத்தியிருப்பார்கள்--கனேடிய பா.உ
திரு பொப் ரே வெளியிட்ட அறிக்கையை அதிர்வு வாசகர்களுக்காக மொழிபெயர்த்து இங்கு தருகிறோம்.ஜூன் 9, 2009 செவ்வாய்க்கிழமை மாலையில் டில்லியில் இருந்து கொழும்பு செல்லும் விமானம் மூலம் நான் இலங்கையை அடைந்தேன். இலங்கை உயர் தூதரகத்தில் எனது விசாவுக்காக வெற்றிகரமாக விண்ணப்பித்து இருந்தேன்,அதேவேளை இலங்கைத் தூதுவர், இலங்கைக்கான கனடியத் தூதுவர் மற்றும் கனடா வெளிவிவகார சர்வதேச வர்த்தக அமைப்பின் அதிகாரிகளுடனும் இதுபற்றிக் கலந்துரையாடி இருந்தேன்.ஆனால், நான் இலங்கையை அடைந்தபோது, தேசிய புலனாய்வின் அடிப்படையில் எனது வருகையானது மறுக்கப்பட்டுள்ளதாக சிறிது நேரத் தாமதத்தின் பின்னர் கனடியத் தூதரக அதிகாரிகள் இருவர் என்னிடம் தெரிவித்தனர். அந்த நேரத்தில் இருந்து கிட்டத்தட்ட 12 மணித்தியாலங்களாக எனது வருகை மறுப்புக்கான காரணத்தைக் கண்டறிய முற்பட்டேன். இங்கும் (இலங்கை) ஒட்டாவாவிலும் உள்ள அதிகாரிகள் எனக்கு முழு ஆதரவு தந்தனர்.
0 comments:
Post a Comment